வழுக்கையை மறைக்க விக்... கடைசி நிமிடத்தில் மாட்டிக்கொண்ட மாப்பிள்ளையின் பரிதாபநிலை
பெண்ணை திருமணம் செய்வதற்காக வழுக்கை தலையை மறைத்து விக் வைத்து வந்த மணமகன் கையும் களவுமாக சிக்கியுள்ளார்.
பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் இளைஞர் ஒருவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் பெரியவர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
திருமண ஏற்பாடுகளும் அரங்கேறிய நிலையில், மாப்பிள்ளைக்கு தலைப்பாகை வைக்க முயன்ற போது அவர், விக் வைத்து தனது வலுக்கை தலையை மறைத்துள்ளது அம்பலமாகியுள்ளது.
இதனை அறிந்த பெண் வீட்டார்கள் கோபத்தின் உச்சத்திற்கு சென்று குறித்த நபரை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் இந்த நபர் தனது முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்ய வந்ததும் தெரியவந்துள்ளது.
Viral video from Bihar, Gaya: A clash erupted when the girl's family found that the groom was bald and wearing a wig. pic.twitter.com/oUyaxTX8kT
— Megh Updates ?™ (@MeghUpdates) July 12, 2023
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |