நிச்சயதார்தத்தில் மணமகன் கொடுத்த சர்ப்ரைஸ்... மணமகள் என்ன செய்தார் தெரியுமா?
திருமண நிச்சயதார்தத்தின் போது மணப்பெண்ணிற்கு மணமகன் அளித்துள்ள சர்ப்ரைஸ் மணமகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பொதுவாக திருமண கொண்டாட்டம் என்றால், சில விசேஷ நிகழ்ச்சிகளும் நடைபெறும். இதில் உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் கலந்து கொண்டு உற்சாக கொண்டாட்டத்தில் இருப்பார்கள்.
தற்போதைய காலக்கட்டத்தில் மணப்பெண்ணை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்த திருமணம் செய்து கொள்ளும் மணமகன்கள் சில சர்ப்ரைஸான விடயங்களை செய்து அசத்துகின்றனர்.
இங்கு மாப்பிள்ளை ஒருவர் நிச்சயதார்தத்திற்கு முன்பு தனக்கு மோதிரம் அணிவிக்கும் விரலில், பெண்ணின் பெயரை டாட்டூ குத்தியுள்ளார்.
நிச்சயதார்தத்தின் போது மணமகள், அந்த மணமகனின் விரலில் மோதிரம் போடும்போதுதான் அந்த விரல் டாட்டூவை பார்த்து மகிழ்ச்சியில் உறைந்துவிடுகிறார்.
மிகவும் இயல்பாக மோதிரம் போட கையை நீட்டிய மணமகன், அந்த பெண் சர்பரைஸால் மகிழ்ச்சியில் அடைந்ததை கண்டு மனம் மகிழ்வதும் அந்த வீடியோவிலேயே தெரிகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |