திருமணமான 10 நாளில் அரங்கேறிய கொலை... கதறும் காதல் மனைவி
காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளையை பெண் வீட்டினர் 10 நாளில் கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதல் திருமணம்
கரூர் மாவட்டம் கருப்பம்பாளையத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(25). இவர் அதே பகுதியைச் சேர்ந்த கோபிகா(19) என்ற சகோதரி உறவுமுறை பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
இவர்களின் திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தும், பெற்றோரை மீறி திருமணம் செய்து கொண்டுள்ளனர். குறித்த வழக்கு தொடர்பாக கடந்த 21ம் தேதி நீதிமன்றம் வரை கிருஷ்ணமூர்த்தி வீடு திரும்பாததால் மனைவி கோபிகா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
வீட்டிற்கு திரும்பியவரை காரில் வந்த கோபிகாவின் உறவினர்களான ஸ்ரீநாத் (24), கார்த்திக் (25), சரவணன் (29), கோபாலகிருஷ்ணன் (23) ஆகிய கடத்தி சென்றுள்ளதையடுத்து, அவர் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.
விசாரணையில் கடத்திச் சென்ற கிருஷ்ணமூர்த்தியை கொலை செய்து கல்லணை ஆற்றில் உடலை வீசியுள்ளதாக தெரிவித்துள்ளனர். கொலைக்கு உடந்தையாக இருந்த கோபிகாவின் சித்தி இந்திரா, சித்தப்பா பிரகாஷ், ரவிவர்மனின் நண்பர்கள் பத்திரி, மோகன் ஆகியோர் தலைமறைவாக உள்ள நிலையில் அவர்களையும் பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |
