போட்டோஷூட்டில் மின்னல் தாக்கி இறந்த மணமகன் - நடந்தது என்ன? அதிர்ச்சி சம்பவம்
திருமணத்திற்கு முன்பு போட்டோஷூட் நடத்தியபோது மணமகன் மின்னல் தாக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக திருமணத்திற்கு முன்பு திருமண ஜோடிகள் நல்ல இடங்களுக்கு சென்று ப்ரீ வெட்டிங் போட்டோஷூட் நடத்துவது சமீப காலத்தில் பிரபலமாகியுள்ளது.
திருமண ஜோடிகள் இவ்வாறான போட்டோஷூட்டுகளை எடுக்க விரும்புகின்றனர். அந்த வகையில், னாவின் யுனான் மாகாணத்தை சேர்ந்த ரூவான் என்ற இளைஞருக்கு இன்னும் சில தினங்களில் திருமணம் நடைபெற இருந்தது.

இதனிடையில், “ஜெட் டிராகன் ஸ்னோ” என்ற மலைப்பகுதியில் ப்ரீ வெட்டிங் ஷூட் நடத்துவதற்காக சென்றுள்ளனர். அப்போது, மழை பெய்துகொண்டிருந்த நிலையில், போட்டோஷூட் நடத்தப்பட்டுள்ளது.
திடீரென வெட்டிய மின்னல் மணமகனை தாக்கியது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். பின், அவரை மருத்துவமனை கொண்டு சென்றபோது அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிய வந்துள்ளது.
இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், வானிலை மோசமாக இருப்பதால் போட்டோஷூட் நடத்த வேண்டாம் என சுற்றுலா நிர்வாகம் அறிவுறுத்தியும் மீறியதாலேயே இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.