மணமகளுக்கு கழுதைக்குட்டியை பரிசளித்த மணமகன்! என்ன காரணம் தெரியுமா?
பாகிஸ்தானில் மணமகளுக்கு மணமகன் கழுதை ஒன்றை பரிசாக அளித்த சம்பவம் வைரலாகி வருகிறது.
தங்களுக்கு பிடித்த நபர்களுக்கு பிறந்தநாள், திருமண நாள் உட்பட கொண்டாட்டங்களின் போது பரிசுகளை வழங்குவது வழக்கம்.
தங்க நகை, வாகனம், புகைப்படங்கள் என பல பரிசுகளை வழங்குவதை பற்றி கேள்விப்பட்டிருப்போம், ஆனால் மிக வித்தியாசமாக பாகிஸ்தானில் மணமகன் ஒருவர் மணமகளுக்கு கழுதைக்குட்டியை பரிசளித்துள்ளார்.
பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் வரிஷா ஜாவேத் கான் மற்றும் அஸ்லான் ஷா, நீண்ட வருடங்களாக காதலித்து வந்த இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர்.
இதன்படி இருவீட்டார் சம்மதத்துடன் மிக பிரம்மாண்டமாக திருமண ஏற்பாடுகள் நடந்தது, திருமண நாளன்று மணமகளுக்கு மறக்க முடியாத பரிசு ஒன்றை வழங்க விரும்பினார் அஸ்லான் ஷா.
திருமண நிகழ்ச்சியில் யாரும் எதிர்பார்க்காதவகையில் கழுதைக்குட்டி ஒன்றை அழைத்து வந்து பரிசளித்துள்ளார் அஸ்லான் ஷா.
இதைப்பார்த்ததும் கண்கலங்கிப்போன வரிஷா, கட்டியணைத்துக்கொண்டார், உறவினர்களோ அதிர்ச்சியில் மூழ்கிப்போயினர்.
இதுகுறித்து பதிவிட்டுள்ள அஸ்லான் ஷா, வரிஷாவுக்கு கழுதைக்குட்டிகள் என்றால் பிரியம், அதனால் தான் திருமண பரிசாக அளிக்க நினைத்தேன், குட்டியுடன் அதன் தாயுடன் சேர்ந்தே இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.