திருமணமான 8 நாளில் உயிரிழந்த புதுமாப்பிள்ளை! நடந்தது என்ன?
திருமணமான 8 நாட்களில் மின்சாரம் பாய்ந்து புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
8 நாளில் உயிரிழந்த புதுமாப்பிள்ளை
கடலுார் மாவட்டம் அடுத்த கெங்கநாயக்கன் குப்பத்தை சேர்ந்தவர் பெருமாள் என்பவரது மகன் விமல்ராஜ்(25). இவர் தனியார் மொபைல் நெட்வெர்க் நிறுவனத்தில் பைபர் கேபிள் ஆப்ரேட்டராக வேலை செய்து வந்துள்ளார்.
இவருக்கு ரவீனா என்ற பெண்ணுடன் கடந்த 8 தினங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று தனது வேலைக்கு சென்ற விமல்ராஜ், செல்போன் கேபிளை சரிசெய்து கொண்டிருந்துள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக மின் கம்பி உரசியதால், மாடியிலிருந்து விமல் கீழே தூக்கி வீசப்பட்டுள்ளார்.
உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள்.ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இறந்தவரின் மனைவி கதறி அழுத சம்பவம் அப்பகுதி மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.