ஒரு முடி வெள்ளையாகி இவ்வளவு காலத்திற்குள் எல்லா முடியும் வெள்ளையாகிடும்! இளநரை தடுக்க சூப்பர் ஐடியா
நரைமுடியை எல்லா வயதிலும் பெறலாம். பள்ளி, கல்லூரி காலம் என வயது பேதமில்லாமல் 20, 30. 40 வயதுகளில் இருக்கலாம்.
இந்த நரைமுடி வருவதை நமது மரபணுக்கள் தீர்மானிக்கிறது.
குறிப்பாக ஒரு முடி நரைப்பதை கண்டால் அனைத்து முடிகளும் நரைக்க 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகலாம். ஒரு நபரது முதுமையின் ஆரம்ப அறிகுறிகளை அடையாளம் காணலாம்.
இதில் சுருக்கங்கள், தொங்கும் தோல் நரை முடிகள் போன்றவை அடங்கும். முன்கூட்டிய நரைக்கு காரணங்கள் பரம்பரை முதல் சுற்றுச்சூழல் வரை பொருந்தும்.

- ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் போன்றவர்களுக்கு வரக்கூடிய வெள்ளை முடிக்கு பொதுவான காரணம் பரம்பரை. இதை எக்காரணம் கொண்டும் மாற்ற முடியாதது.
- உடலில் மெலனின் உற்பத்தி குறைந்து இருப்பது அல்லது மெலனோசைட்டுகள் எனப்படும் மயிர்க்கால்களில் உள்ள செல்கள் இரண்டு நிறமிகளை உருவாக்குகின்றன. காலப்போக்கில் செல் மேற்பரப்பில் உள்ள மெலனோ சோம்களின் உற்பத்தியால் படிப்படியாக குறைக்கப்படுகின்றன.
- மன அழுத்தத்தை உடல் எப்படி உணர்கிறது என்பதை பொறுத்து தலைமுடி தோற்றம் மாறுபடும். அசெளகரியமான மன நிலைகள் அல்லது நடத்தைகள் தீர்மானிக்கும். இது உணர்ச்சி மற்றும் உடல் இரண்டின் பாதிப்பை பொறுத்து கூந்தலில் பிரதிபலிக்கும்.
- வைட்டமின் பி-12 குறைபாடு கூந்தல் ஆரோக்கியத்தினை பாதிக்கும்.
இளநரை தடுக்க சூப்பர் ஐடியா
பாரம்பரியமாகவே இளவயதில் நரை வரும் அபாயம் கொண்டவர்கள் சரியான பராமரிப்பை மேற்கொள்ளலாம்.
கூந்தலுக்கு கறிவேப்பிலை தேங்காயெண்ணெய் கலவை பயன்படுத்தலாம்.

வெங்காயம் மற்றும் எலுமிச்சை சாறு ஹேர் பேக் போடலாம். முன்கூட்டிய நரையை தடுக்க வெங்காயம் பழமையான தீர்வுகளில் ஒன்றாகும்.
மருதாணி மற்றும் முட்டை ஹேர் பேக் முன்கூட்டிய இளநரையை தடுக்கும்.
கடுகு எண்ணெய் உணவுகளில் சிறந்த சுவை மட்டுமல்ல. இது முடிக்கு சிறந்த தேர்வாகும். கடுகு எண்ணெய் ஆன்டி ஆக்ஸிடண்ட்கள், செலினியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளின் வளமான ஆதாரங்கள். இது உங்கள் கூந்தலுக்கு விரும்பும் பளபளப்பான தோற்றத்தை கொடுக்கும். இது நரையை மறைக்க செய்யும்.