அடிக்கடி கிரீன் டீ குடித்தால் என்னென்ன பிரச்சினைகள் வரும் தெரியுமா?
பொதுவாகவே நம்மில் சிலர் தேநீர் பிரியர்களாகத் தான் இருப்பார்கள். அவர்கள் எந்த டென்சன் வந்தாலும் உடனே தேநீரை தான் தேடுவார்கள்.
அப்படி இருக்கும் தேநீர் பிரியர்கள் அதன் வகைகளையும் நிச்சயமாக சுவைத்திருப்பார்கள். அந்த தேநீர்களில் கிரீன் டீ மிக முக்கிய இடத்தில் இருக்கிறது. ஏனெனில் கிரீன் டீ குடித்தால் உடல் எடை குறைப்பது முதல் இதய நோய் ஆரோக்கியத்தை பேணுவது தொடக்கம் பல நன்மைகளைக் கொண்டிருக்கிறது.
அந்தவகையில் அடிக்கடி கிரீன் டீ குடித்தால் என்னென்ன பிரச்சினைகள் வரும் தெரியுமா?
கிரீன் டீயின் தீமைகள்
நாம் தினமும் அதிகளவான கிரீன் டீயை குடிக்கும் போது அதில் இருக்கும் டேனின்கள் வயிற்று வலியையும் வயிற்றில் அமிலச்சுரப்பையும் அதிகரிக்கிறது.
கிரீன் டீயில் இருக்கும் கெஃபைன் தலைவலியை ஏற்படுத்துகிறது. கிரீன் டீயில் கெஃபைன் குறைவாக இருந்தாலும் அடிக்கடி குடிக்கும் போது தூக்கமின்மை பதட்டம், எரிச்சல், குமட்டல் போன்ற பிரச்சினைகளை ஏற்படுகிறது.
கிரீன் டீயை அதிக அளவில் உட்கொள்வது அரிதான சந்தர்ப்பங்களில் கல்லீரல் ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கலாம்.
கிரீன் டீயை அதிக அளவில் எடுத்துக் கொண்டால் இரத்த அழுத்தத்தை குறைக்கலாம்.
செரிமான மண்டலத்தை எரிச்சலடையச் செய்யும்.
கிரீன் டீயில் உள்ள பொருட்கள் கால்சியம் உறிஞ்சுவதையும் தடுத்து, எலும்புகளில் இழப்பை ஏற்படுத்துகிறது
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |