Green Tea: கிரீன் டீ பிரியரா நீங்கள்? அப்போ இந்த தவறை செய்யாதீங்க
இன்று பெரும்பாலான நபர்கள் கிரீன் டீ பருகும் பழக்கம் உள்ள நிலையில், கிரீன் டீ எடுத்துக் கொள்ளும் போது சில செய்யக்கூடாத தவறுகளை இங்கு தெரிந்து கொள்வோம்.
கிரீன்
கிரீன் டீ உடல் பருமனைக் குறைப்பதுடன், உடலை டீடாக்ஸ் செய்து ஆரோக்கியமாக வைத்துக் கொள்கின்றது. மேலும் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து கொழுப்பை எரிக்கும் செயல்முறையை துரிதப்படுத்துகின்றது.
ஆனால் இதன் பயன்கள் முழுமையாக கிடைக்க வேண்டும் வேண்டும் என்றால் இதனை சரியான முறையில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதையெல்லாம் செய்யாதீங்க...
கொதிக்கும் நீரில் கிரீன் டீ சேர்ப்பதாலும், அல்லது கிரீன் டீயை போட்டு கொதிக்க வைத்தால் அதில் நன்மை அளிக்கும் சேர்மங்கள் அழிக்கப்பட்டு, கசப்பான சுவையை கொடுக்கின்றது. இதனால் 80-85 டிகிரி செல்சியஸ் தண்ணீரில் கிரீன் டீயை தயாரிக்கவும்.
சாப்பிட்ட உடனே கிரீன் டீ குடிப்பதை தவிர்க்கவும். ஏனெனில் உணவில் உள்ள இரும்புச்சத்து உறிஞ்சப்படுவதில் இடையூறு ஏற்படுவதுடன், நாளடைவில் ரத்த சோகையை ஏற்படுத்தும். ஆதலால் சாப்பிட்ட அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரத்திற்கு பின்பு கிரீன் டீயை குடிக்கலாம்.
Image Credit: 5 second Studio/Shutterstock
கிரீன் டீயில் உள்ள டானின்கள், வயிற்றின் அமிலத்தன்மை அதிகரிப்பதால், வயிற்று அசௌகரியம், குமட்டலை ஏற்படுத்தும். எனவே, செரிமான பிரச்சனையை தவிர்க்க, க்ரீன் டீயை வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
கிரீன் டீ-யில் அதிக ஆரோக்கிய நன்மைகள் காணப்பட்டாலும், இதனை அதிகளவில் குடிப்பது, பதட்டம் மற்றும் செரிமான பிரச்சனை போன்ற எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதுகின்றது. தினமும் 2 - 3 கப் கிரீன் டீ உட்கொள்வது பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.
ஏதேனும் சிகிச்சை எடுத்துக் கொள்பவராக இருந்தால் கிரீன் டீ எடுத்துக் கொள்வதை தவிர்க்கவும். தேவையெனில் மருத்துவரின் ஆலோசனையை கேட்டு எடுத்துக் கொள்ளலாம்.
உபயோகப்படுத்திய பையை மீண்டும் பயன்படுத்த வேண்டாம். ஒவ்வொரு முறை க்ரீன் டீ தயாரிக்கும் போதும் புதிய தேநீர் பையைப் பயன்படுத்தவும். இதன் மூலம் சிறந்த சுவை மற்றும் ஆரோக்கிய நன்மைகளை முழுமையாக பெறலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |