கிரீன் டீ அருந்துபவர்களா நீங்கள்? இப்படியான விடயங்களை எல்லாம் தவிர்ப்பது கட்டாயம்
பொதுவாகவே நம்மில் சிலர் தேநீர் பிரியர்களாகத் தான் இருப்பார்கள். அவர்கள் எந்த டென்சன் வந்தாலும் உடனே தேநீரை தான் தேடுவார்கள். அப்படி இருக்கும் தேநீர் பிரியர்கள் அதன் வகைகளையும் நிச்சயமாக சுவைத்திருப்பார்கள்.
அந்த தேநீர்களில் கிரீன் டீ மிக முக்கிய இடத்தில் இருக்கிறது. ஏனெனில் கிரீன் டீ குடித்தால் உடல் எடை குறைப்பது முதல் இதய நோய் ஆரோக்கியத்தை பேணுவது தொடக்கம் பல நன்மைகளைக் கொண்டிருக்கிறது.
ஆனால் பல நன்மைகளைக் கொண்டிருக்கும் கிரீன் டீயைக் குடிக்கும் போது தவிர்க்க வேண்டிய சில விடயங்கள் இருக்கின்றன.
கிரீன் டீ குடிக்கும்போது தவிர்க்க வேண்டியவை
வெறும் வயிற்றில் கிரீன் டீ குடித்தால் அதில் இருக்கும் டானின்கள் வயிற்றின் அமிலத்தன்மை அதிகரிக்கும். இது வயிற்று பிரச்சினை மற்றும் குமட்டல் என்பவற்றுக்கு காரணமாகிறது. அதனால் கிரீன் டீ குடிப்பதற்கு முன் ஏதாவது சாப்பிட வேண்டும்.
கிரீன் டீயில் அதிக நன்மைகள் இருந்தாலும் அதனை அதிகமாக குடிப்பதால் பதட்டம், தூக்கமின்மை, செரிமான பிரச்சினைகள் ஏற்படும். ஆகவே தினமும் 2 இலிருந்து 3 வரை குடிக்கலாம்.
கிரீன் டீயில் அதிகம் காபின் இருப்பதால் இதனை கிரீன் டீயை இரவில் குடித்தால் தூக்கத்தில் சில பிரச்சினைகள் ஏற்படும். ஆகவே தூங்க செல்வதற்கு 2-3 மணி நேரத்திற்கு முன் கிரீன் டீயை குடிப்பதை தவிர்க்கவும்.
உணவு சாப்பிட்டவுடன் கிரீன் டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும் ஏனெனில் உணவில் இருக்கும் இரும்புச் சத்து உறிஞ்சப்படுவதில் பிரச்சினை ஏற்படும்.இதனால் இரத்த சோகையும் ஏற்படும்.
கொதிக்கும் தண்ணீரில் கிரீன் டீயை காய்ச்சினால் டீயில் இருக்கும் சத்துக்களும் சேர்மானங்களும் அழிந்து போகும் அதனால் 80-85 டிகிரி செல்சியஸ் வரை குறைந்த நீரில் காய்ச்சி அருந்த வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |