சர்க்கரை நோயாளிகள் க்ரீன் டீ குடிக்கலாமா? ஒரு நாளைக்கு எத்தனை முறை குடிக்க வேண்டும்?
க்ரீன் டீ மிகவும் ஆரோக்கியமான பானமாகும். சர்க்கரை நோயாளிகளுக்கு எந்த பக்க விளைவையும் ஏற்படுத்தாமல் இது நன்மை பயக்கிறது.
ஆனால் க்ரீன் டீயில் குறைந்த அளவு காஃபின் இருப்பதால் அதை உட்கொள்ளும் அளவில் கவனமாக இருக்க வேண்டும்.
ஒரு நாளைக்கு அதிகப்பட்சமான 2 இல் இருந்து மூன்று முறை க்ரீன் டீ அருந்தலாம்.
க்ரீன் டீ மூலம் அதிகப்பட்ச நன்மைகளை பெற விரும்பினால் அதில் சர்க்கரை சேர்க்க வேண்டாம். இனிக்காத க்ரீன் டீ மிகவும் ஆரோக்கியமானது.
எடை டபுள் மடங்கா குறையனுமா... தினமும் இத குடிச்சாலே போதுமாம்
இந்த க்ரீன் டீயில் ஆரோக்கியமாகவும் அதே சமயம் சுவையை மேம்படுத்த நினைத்தால் இதில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் புதினாவை சேர்த்துக்கொள்ளலாம்.
2 அல்லது 3 நிமிடங்கள் மட்டுமே க்ரீன் டீ கொதிக்க வைக்கப்பட வேண்டும் அதற்கு மேல் கொதிக்க வைக்கப்பட்டால் உங்கள் பானம் கசப்பானதாக இருக்கும். மேலும் அதிகப்பட்ச நன்மைகளை பெற இளம்பச்சை தேயிலை இலைகளையே தேர்ந்தெடுக்கவும்.
எடை டபுள் மடங்கா குறையனுமா... தினமும் இத குடிச்சாலே போதுமாம்! ஒரே வாரத்தில் அதிசயம் நடக்கும்
ஆரோக்கியமான கிரீன் டீ செய்யத் தேவையான பொருட்கள்
- பச்சை தேயிலை இலைகள்
- தண்ணீர்
கிரீன் டீ செய்முறை
- முதலில் ஒரு கப் வெந்நீரை கொதிக்க வைக்கவும்.
- பிறகு ஒரு தேக்கரண்டி தேயிலை இலைகளை அளந்து அதனுடன் சேர்க்கவும்.
- தேநீர் பைகளை உபயோகித்தால், ஒரு கப் வெந்நீருக்கு ஒரு டீபாக் சிறந்தது.
- தேயிலை இலைகளை சூடான நீரில் 2-3 நிமிடங்கள் ஊற விடவும்.
- அதை விட அதிகமாக கசப்பான சுவை ஏற்படலாம்.
-
இப்போது காய்ச்சிய டீயை ஒரு கோப்பையில் வடிகட்டவும்.
நீங்கள் சுவைக்காக சில துளிகள் தேன், எலுமிச்சை அல்லது இஞ்சியைச் சேர்க்கலாம்.
