சமந்தா போல ஒல்லியாகனுமா? இந்த ஒரே ஒரு பானம் போதும் எடை தானாக குறையும்!
நடிகை சமந்தா உடலை பிட்னஸாக வைத்துக் கொள்வதற்கு தினமும் கடுமையான உடற்பயிற்சி செய்வது அனைவருக்கும் தெரிந்த விடயம்.
எனினும் உடற்பயிற்சியுடன் நிறுத்தி விடாமல் தன்னுடைய அழகை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள கீரைகளைக்கொண்டு தயாரிக்கப்படும் ஆரோக்கியமான ஸ்மூதியைத் தினமும் காலையில் குடிப்பாராம்.
அதை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.

கிரீன் ஸ்மூதி செய்யும் முறை
தேவையானப் பொருள்கள்
- இலைக்கோசு- 1 கைப்பிடி
- பசலைக்கீரை - 1கைப்பிடி
- ஆளி விதைகள் - 2 தேக்கரண்டடி
- சூரிய காந்தி விதைகள் - 1தேக்கரண்டி
- பாதாம்- 1 டீஸ்பூன்
- சியா விதைகள் - 1 டீஸ்பூன்
- இளநீர், மற்றும் டிரை வாழைப்பழம்
செய்முறை
முதலில் இலைக்கோசு மற்றும் பசலைக்கீரையை தண்ணீரில் நன்றாக கழுவி சில நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் இளநீரை ஊற்ற வேண்டும்.
இதனுடன் ஆளி விதைகள், சூரியகாந்தி விதைகள், சியா விதைகள் மற்றும் உடைத்த பாதாம் போன்றவற்றை சேர்த்து நன்கு கலக்கிவிட்டு சுமார் 10 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும்.

தொடர்து வேக வைத்த கீரைகள் மற்றும் இளநீருடன் கலந்த விதைகள் மற்றும் வாழைப்பழம் போன்றவற்றைச் சேர்ந்து மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும்.
இப்பொழுது சுவையான மற்றும் ஆரோக்கியமான ஸ்மூதி ரெடியாகிவிட்டது.
இறுதியில் இதனைப் பரிமாறுவதற்கு முன்னதாக, ஐஸ் கட்டி தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளலாம்.