உடலை இரும்பு போல வலிமையாக்க வேண்டுமா? இந்த ஒரு பச்சை பொடி போதும்
உடலை வலிமையாக்க, பல்வேறு வைட்டமின்கள், தாதுக்கள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் புரதங்கள் தேவை. இதற்காக மக்கள் பல வகையான பொருட்களை உட்கொள்கிறார்கள்.
தற்போது இருக்கும் வேலையின் அவசரம் காரணமாக ஊட்ச்சத்து நிறைந்த உணவை யாரும் எடுத்துக்கொள்வதில்லை. இதற்கு நேரமும் கிடைப்பதில்லை.
ஆனால் பல ஊட்டச்சத்துக்களையும் நாம் ஒரே ஒரு பொருளில் எடுத்துக்கொள்ள முடியும். அது தான் ஸ்பைருலினா. இந்த ஸ்பைருலினா என்பது ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாகும்.
இதில் அதிக அளவு புரதம், இரும்புச்சத்து, வைட்டமின் பி12, வைட்டமின் ஏ, ஃபோலிக் அமிலம், தாமிரம், நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் உள்ளன.
எடை இழப்பு மற்றும் சர்க்கரை கட்டுப்பாட்டில் ஸ்பைருலினா பயனுள்ளதாக கருதப்படுகிறது.இதை நாம் சாப்பிடுவதால் என்ன நன்மை கிடைக்கம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஸ்பைருலினா
ஸ்பைருலினா என்பது கடல் பாசி . இது சுருள் பாசி என்றும் அழைக்கப்படுகிறது. இது உணவாக பயன்படுகிறது. இது ஒரு நுண்ணிய நேரடியாக கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறத்தில் நீரில் வாழும் தாவரம்.
இது மிகவும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. இதில் 55.65%புரதச் சத்து உள்ளது. இதனால் உடல் வளர்ச்சிக்கு முக்கிய உணவாக உள்ளது. உலகில் சுமார் 25ஆயிரம் வகைகள் இருக்கின்றன.
ஆனால் தற்போது 5வகைப் பாசிகள் மட்டுமே உணவாகப் பயன்படுகிறது. அதில் முதலிடம் வகிக்கிறது ஸ்பைருலினா எனும் சுருள் பாசி தான்.
ஸ்பைருலினா பொடியை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
ஒரு ஸ்பூன் ஸ்பைருலினாவை சாப்பிடுவதன் மூலம், உடலுக்கு 4 கிராம் புரதம், 11% வைட்டமின் பி1, 15% வைட்டமின் பி2, 4% வைட்டமின் பி3, 21% தாமிரம் மற்றும் 11% இரும்புச்சத்து கிடைக்கும்.
இதில் 20 கலோரிகளும் 1.7 கிராம் ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்டுகளும் உள்ளன. இதன் காரணமாக இதை ஆரோக்கியத்திற்கு சிறந்த உணவாக எடுத்துக்கொள்ளலாம்.
உடலுக்கு புரதம் - ஸ்பைருலினா சாப்பிடுவதால் உடலில் புரதச்சத்து அதிகம் பெறும். உடற்பயிற்சி பயிற்சி செய்பவர்கள் அல்லது எடை இழக்கத் திட்டமிடுபவர்கள் புரதப் பொடியை எடுத்துக்கொள்வதற்குப் பதிலாக இந்த ஆரோக்கியமான இயற்கை ஸ்பைருலினா பொடியை சாப்பிடலாம்.
வைட்டமின் பி12 - உடலில் வைட்டமின் பி12 குறைபாட்டை ஸ்பைருலினா சாப்பிடுவதன் மூலம் குணப்படுத்தலாம். இது மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக்குவதில் பயனுள்ளதாக இருக்கும்.
மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துவதிலும் மன அழுத்தத்தைக் குறைப்பதிலும் ஸ்பைருலினா நன்மை தரும்.
அமினோ அமிலங்கள் - புரதத்துடன், அமினோ அமிலங்களும் ஸ்பைருலினாவில் காணப்படுகின்றன. அமினோ அமிலங்கள் இரைப்பை மற்றும் சிறுகுடல் புண்களைக் குணப்படுத்த உதவுகின்றன.
ஸ்பைருலினாவில் குளோரோபில் இருப்பதால், செரிமானம் மேம்படுகிறது. இதனால் தசைகள் வலிமையடையும்.
ஆக்ஸிஜனேற்றிகள் - ஸ்பைருலினாவில் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. இதன் மூலம், உடலில் ஏற்படும் வீக்கப் பிரச்சனையைக் குறைக்கலாம்.
ஸ்பைருலினா எந்தவொரு தொற்றுநோயையும் தடுக்க உதவுகிறது. ஸ்பைருலினா ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |