வீட்டுல பச்சை பட்டாணி இருக்கின்றதா? ஈவ்னிங் ஸ்நாக்ஸ் ஈஸியா செய்திடலாம்
பொதுவாக குழந்தைகளுக்கு பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் வேளையில் அவர்கள் சாப்பிட ஸ்நாக்ஸ் செய்து வைப்பார்கள் பெற்றோர்கள். இங்கு வெறும் 20 நிமிடத்தில் பச்சை பட்டாணியில் போண்டா செய்வது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
பச்சைப் பட்டாணி - 200 கிராம்
கேரட் துருவல் - ஒரு டீஸ்பூன்
வெங்காயம் - 1
தக்காளி, பச்சை மிளகாய் - தலா - 2
கொத்தமல்லித்தழை, புதினா - சிறிதளவு
எண்ணெய் - 300 கிராம்
உப்பு - தேவையான அளவு.
மேல் மாவுக்கு:
கடலை மாவு - 150 கிராம்
அரிசி மாவு - 25 கிராம்
மிளகாய்த்தூள், உப்பு - சிறிதளவு
செய்முறை:
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லித்தழை, புதினா, ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
பச்சை பட்டாணியை வேக வைத்து மசித்து, அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, கொத்தமல்லித்தழை, புதினா, கேரட் துருவல் சேர்த்துப் பிசையவும்.
பிசைந்த கலவையை சிறுசிறு உருண்டையாக உருட்டிக் கொண்டு, மேல்மாவுக்கு கொடுக்கப்பட்ட அனைத்தையும் தோசைமாவை விட சற்று தளர்வாக கரைத்துக் கொண்டு, குறித்த உருண்டையை அதனுள் முக்கி எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுக்கவும்.
பச்சைப் பட்டாணி இல்லாத சமயத்தில் உலர்ந்த பட்டாணியை ஊறவைத்து, வேகவிட்டு அரைத்து பயன்படுத்தியும் இந்த போண்டாவை செய்யலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |