பணப்புழக்கத்தை அதிகரிக்க உதவும் பச்சை குங்குமம்
பெண்கள் மங்களகரமாக விளங்கப்படும் குங்குமத்தை தினமும் வைப்பதால், மகாலட்சுமியின் கடாட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
மஞ்சள், தண்ணீர், படிகாரம், சுண்ணாம்பு ஆகியவற்றை சேர்த்தே குங்குமம் தயாரிக்கப்படுகிறது.
குங்குமம் வைத்துக்கொள்வதால் உடல் சூடு குறைந்து, உடலில் காந்த சக்தி அதிகரிக்கும்.
பொதுவாக குங்குமம் சிவப்பு நிறத்திலேயே இருக்கும். ஆனால் பச்சை நிற குங்குமத்தை பற்றி பலரும் அறிந்திடாத ஒன்று.
பச்சை குங்குமத்தை, "குபேர குங்குமம்" என்றும் கூறுவார்கள். இது உடல் நலம், செல்வச் செழிப்பு ஆகியவற்றைக் கொடுக்கும்.
இந்த பச்சை குங்குமம் மகாலட்சுமியையும், குபேரனையும் பூஜை செய்யப் பயன்படுத்தும் பொருட்களை வைத்து இயற்கையான முறையில் தயாரிக்கப்படுகிறது.
மஞ்சள், கற்றாழை, வேம்பு, அரசமர இலை, துளசி ஆகியவை கொண்டு தயாரிக்கப்படும் இந்த குங்குமம் ஆரோக்கியத்தையும், நன்மையையும் தருவதாகக் கூறப்படுகிறது.
குபேர குங்குமத்தை தினமும் நெற்றியில் வைத்துக்கொள்வதால், செவ்வ செழிப்பு, வெற்றி, வளம் போன்றவை கிடைக்கும்.
பணப்பிரச்னை, கல்வித்தடை, கடன் தொல்லை, திருமணத்தடை, குடும்ப சண்டை ஆகியவற்றை போக்கக்கூடியது.
நினைத்த காரியம் வெற்றியடைய பச்சை குங்குமத்தை தொடர்ந்து பயன்படுத்தலாம்.
பொதுவாக, பச்சை குங்குமத்தை தினமும் பயன்படுத்தலாம். குறிப்பாக, புதன் கிழமைகளில் பயன்படுத்துவது நல்ல பலனைக் கொடுக்கும்.
குங்குமத்தை வாங்கி கோயிலில் வைத்து பூஜித்து பின் தினமும் பயன்படுத்தலாம். இந்த குங்குமத்தை வீட்டில் உள்ளவர்களைத் தவிர்த்து, வெளியாட்களுக்குத் தரக்கூடாது.