மீனுக்கு உணவு கொடுத்த கொக்கு! கடைசியில் மீனையே உணவாக்கும் காட்சியை பாருங்க
பச்சை நிற கொக்கு ஒன்று மிகவும் சாமர்த்தியமான மீனுக்கு உணவிட்டு அந்த மீனையே உணவாக்கிய காட்சி ட்ரெண்டாகி வருகின்றது.
மீனை வேட்டையாடும் கொக்கின் தந்திரம்
பொதுவாக விலங்குகள் மற்றும் பறவைகள் தனது பசிக்கு தேவையான உணவுகளை தானே தேடிக் கொள்ள வேண்டும். மேலும் மனிதர்களை போன்று இவை கிடையாது.
ஆம் மனிதர்கள் நாளைய தேவைக்கு சேர்த்து வைத்து கவலையில்லாமல் இருப்பார்கள். ஆனால் இம்மாதிரியான ஐந்தறிவு ஜீவன்கள் அன்றைய தினத்தின் தேவையை அன்றைக்கு தான் பெற்றுக் கொண்டு திருப்தியாக இருக்கின்றது.
இங்கு பச்சை நிற கொக்கு ஒன்று செய்த ஸ்மார்ட்டான காரியத்தையே காணொளியில் காணப்போகிறோம். இக்காட்சியில் மீனுக்கு கொக்கு தொடர்ந்து சாப்பாடு போட்டுக்கொண்டே இருக்கின்றது.
இக்காட்சியை பார்க்க மகிழ்ச்சியாக இருந்த தருணத்தில் எதிர்பாராமல் இறுதியில் மீனை தனக்கு பசிக்கு அழகாக வேட்டையாடி சாப்பிட்டுவிடுகின்றது.