உடல் எடையை குறைப்பதில் கிரீன் டீ அல்லது கிரீன் காபி: இவற்றில் எது சிறந்தது?
உடல் எடையை குறைப்பதிலிருந்து பல உடலில் ஏற்படும் பிரச்சனைகளை நீங்குவது வரை பல நன்மைகளை கிரீன் டீ வழங்குகிறது.
அதே சமயம் கிரீன் டீயை போல கிரீன் காபியும் தற்போது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
பொதுவாக காபியை அளவுக்கு அதிகமாக உட்கொள்ளக்கூடாது என்று சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
ஆனால் தற்போது கிரீன் காபி உடல் ஆரோக்கியத்திற்கு நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் அனைவரும் கிரீன் டீ அல்லது கிரீன் காபி இதில் எது சிறந்தது என்ற கேள்வி உருவாகியிருக்கிறது.
கிரீன் டீ மற்றும் கிரீன் காபியின் நன்மைகள்
கிரீன் டீ மற்றும் கிரீன் காபி இரண்டும் மிகவும் பிரபலமான பானங்கள் மற்றும் ஆரோக்கியம் நிறைந்தவை ஆகும்.
இவற்றை தொடர்ந்து உட்கொள்வது பல உடல்நலப் பிரச்சனைகளிலிருந்து உடலை பாதுகாக்கும்.
தினசரி இவற்றை குடிப்பதன் மூலம் சர்க்கரை நோய், உடல் பருமன், ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளை குணப்படுத்திவிடலாம்.
கிரீன் டீ மற்றும் கிரீன் காபி எது சிறந்தது?
கிரீன் டீ மற்றும் கிரீன் காபி இரண்டும் இயற்கையான பொருட்கள் மற்றும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
இரண்டு பானங்களும் உடல் ஆரோக்கியத்தை உள்ளே இருந்து மேம்படுத்துகிறது மற்றும் உடலில் இருக்கும் நச்சுகளை நீக்குகிறது.
இது தவிர, குறிப்பாக இரண்டு பொருட்களும் உடல் பருமனை குறைக்கிறது.