காரத்திற்கு மட்டுமல்ல... பச்சை மிளகாய் சாப்பிடுவதன் நன்மைகள்
நாம் உணவுகளில் பச்சை மிளகாயை காரத்திற்காக மட்டுமே பயன்படுத்தி வருகிறோம். ஆனால் அதை சாப்பிடுவதால் ஏராளமான சத்துக்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளன.
தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும்
பச்சை மிளகாயில் விட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டீன் போன்ற ஆன்டி ஆக்சிடன்டுகள் நிறைந்திருக்கின்றன, இது நாள்பட்ட தொற்று நோய்களிலிருந்து காப்பதுடன் வயதாவதை தடுக்கிறது.
விட்டமின் சி நிறைந்திருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது, பக்டீரியா, வைரஸ் போன்ற தொற்றுகளிலிருந்து நம்மை பாதுகாக்கும்.
கண்களின் ஆரோக்கியத்துக்கு அவசியமான விட்டமின் ஏ நிறைந்திருக்கிறது, பச்சை மிளகாயை உணவில் சேர்த்து கொள்வதால் கண் ஆரோக்கியம் மேம்படும்.
கொழுப்பை குறைக்கும்
பச்சை மிளகாயில் உள்ள Capsaicin, கொழுப்பின் அளவை குறைப்பதால் இதய ஆரோக்கியம் பாதுகாக்கப்படும், குறிப்பாக ரத்த அழுத்தத்தையும் சீராக்குகிறது.
மேலும் Capsaicin, வலி நிவாரணியாகும், நாள்பட்ட வலிநிலைகளை நிர்வகிப்பதில் சிறந்ததாகும், ரத்த நாளங்களை விரிவுபடுத்துவதன் மூலம் உடலில் சரியான ரத்த ஓட்டம் இருக்கும், இதனால் உடலின் பல்வேறுபட்ட திசுக்களுக்கு சரியான அளவில் ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களும் கிடைக்கப்பெறும்.
