புற்றுநோய்க்கும், பச்சை மிளகாய்க்கும் என்ன சம்பந்தம்? பலரும் அறியாத உண்மை
நமது உணவில் பெரும்பாலான நபர்கள் பச்சை மிளகாயை ஒதுக்கி வைத்திருக்கும் நிலையில், இவற்றில் ஆரோக்கிய நன்மையைக் குறித்து தற்போது தெரிந்து கொள்ளலாம்.
புற்றுநோய்க்கு பச்சை மிளகாய்
பச்சை மிளகாயில் இருக்கும் கேப்சைசின், அதிகளவு கொலஸ்ட்ரால் மற்றும் உடல் பருமனுக்கு எதிராக செயல்படுகின்றது. இது கொழுப்பை எரித்து, உங்கள் எடைஇழப்பிற்கு துணை புரிகின்றது.
பச்சை மிளகாயில் உள்ள கேப்சைசின் மார்பக புற்றுநோய், கணைய புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், புரோஸ்டேடிக் புற்றுநோய் மற்றும் இரைப்பை புற்றுநோய் போன்ற பல வகையான புற்றுநோய் செல்களுக்கு எதிராக போராடும் திறன் பெற்றது.
பச்சை மிளகாயை சாப்பிடுவது, இதய நோயால் ஏற்படும் இறப்புகளை குறைக்கிறது. டைப் 2 நீரிழிவு மற்றும் இதய நோய்க்கு இது மிகவும் சிறந்த மருந்தாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |