ஹோட்டல் ஸ்டைல் கிரீன் சிக்கன் டிக்கா இனி வீட்டிலேயே செய்யலாம்!
பொதுவாக சிக்கன் என்றாலே மிகவும் பிடிக்கும்.
சிக்கனில் புரோட்டீன் சத்துக்கள் அதிகமாக இருப்பதால் உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் எடுத்துக் கொள்ளலாம்.
சிக்கனை பயன்படுத்தி கறி, பொரியல், டேவள், பிரட்டல் என ஏகப்பட்ட வகையில் சமைக்கலாம்.
அந்த வகையில் ஹோட்டல் ஸ்டைல் கிரீன் சிக்கன் டிக்கா எவ்வாறு செய்வது என்பது குறித்து தொடர்ந்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- சிக்கன் - 1/2 கிலோ
- பச்சை மிளகாய் - 4
- இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
- புதினா - 2 கைப்பிடி
- கொத்தமல்லி - 1 கைப்பிடி
- எலுமிச்சை சாறு - பாதி
- மஞ்சள் பொடி - 1/2 ஸ்பூன்
- நெய் - 2 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
தயாரிப்பு முறை
முதலில் சிக்கனை நன்றாக சுத்தம் செய்து, அதற்கு தேவையான பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட், புதினா, கொத்தமல்லி சுத்தம் செய்து மிக்ஸி சாரில் போட்டு அரைக்கவும்.
பின்னர் சிக்கனை ஒரு பவுலில் போட்டு எழுது, எலுமிச்சை சாறு, மஞ்சள் பொடி, உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து 4 மணி நேரம் குளிர்சாதனப் பெட்டியில் ஊற வைக்கவும்.
4 மணி நேரங்களுக்கு பின்னர் ஊறிய சிக்கனை மைக்ரோவேவ் ஓவனில் கிரில் செய்து எடுக்கவும் அல்லது பேனில் நெய் விட்டு, அதில் சிக்கனை போட்டு மிதமான சூட்டில் வேக விட்டு எடுக்கவும்.
தற்போது சுவையான கிரீன் சிக்கன் டிக்கா தயார்!