க்ரீன் ஆப்பிளை தோலுடன் நீரிழிவு நோயாளி சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
சில பழங்களை தோலுடன் சாப்பிட்டால் அதன் முழு பலன்களையும் பெற்றிட முடியும்.
அப்படி நாம் சாப்பிட வேண்டிய பழங்களில் ஒன்றி க்ரீன் ஆப்பீள்.
க்ரீன் ஆப்பிளை எப்போது சாப்பிட்டாலும் தோலுடன் தான் சாப்பிட வேண்டும்.
அதனால் நன்கு நீரில் கழுவிவிட்டு தோலுடன் சாப்பிடுங்கள். அஜீரணக் கோளாறு, வயிற்று வலி ஆகிய பிரச்சினையால் அவதிப்பட்டால் உடனே ஒரு துண்டு க்ரீன் ஆப்பிள் சாப்பிடுங்ள்.
நல்ல தீர்வு கிடைக்கும். க்ரீன் ஆப்பிளை வேகவைத்தும் சாப்பிடலாம்.
க்ரீன் ஆப்பிளை தோலுடன் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மை
சிவப்பு ஆப்பிளை விட பச்சை ஆப்பிளில் அதிகப்படியான ஆன்டி - ஆக்சிடண்ட்டுகள் நிறைந்திருக்கின்றன.
இதிலுள்ள அதிகப்படியான நார்ச்சத்து மற்றும் முக்கிய வைட்டமின்களான வைட்டமின் ஏ மற்றும் சி ஆகியவை ஜீரண மண்டலத்தின் செயல்பாடுகளை அதிகரிக்கச் செய்கின்றன.
க்ரீன் ஆப்பிளில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் நம்முடைய உடலின் மெட்டபாலிசத்தை முறைப்படுத்தி அஜீரணக் கோளாறு, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் உண்டாகாமல் தடுக்க உதவுகிறது.
க்ரீன் ஆப்பிளில் உள்ள ஆன்டி- ஆக்சிடண்ட்டுகள் உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுக்களை வெளியேற்றி உடலின் உள்ளுறுப்புகளை சுத்தம் செய்யும்.
குறிப்பாக கல்லீரலை சுத்தம் செய்து ஹெபடைடிஸ் போன்ற நோய்த் தொற்றுக்கள் உண்டாகாமல் பார்த்துக் கொள்கிறது. அதேபோல க்ரீன் ஆப்பிளை தோல் சீவாமல் தோலுடன் சாப்பிடுவது மிகவும் நல்லது.
அது கல்லீரலில் ஏற்படும் தொற்றுக்களை சரிசெய்யவும் ஜீரண மண்டலத்தை ஆரோக்கியமாக வைக்கவும் உதவுகிறது.
க்ரீன் ஆப்பிள் நம்முடைய இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதிலுள்ள அதிக அளவிலான நார்ச்சத்துக்கள் உடலில் உள்ள கெட்ட கொலஸ்டிராலின் அளவைக் குறைக்கச் செய்கிறது.
க்ரீன் ஆப்பிளில் அதிகப்படியான வைட்டமின் சி இருக்கிறது. இது சருமத்தில் கதிர் வீச்சுக்களால் ஏற்படும் பாதிப்பை குறைத்து சருமத்தை பொலிவாக வைத்திருக்க உதவும்.
தினமும் க்ரீன் ஆப்பிள் சிறிதளவு சாப்பிட்டு வந்தால் சருமத்தில் உண்டாகும் கருந்திட்டுக்கள், எக்ஸிமா போன்ற சரும நோய்கள் வராமல் தடுக்க முடியும். முக்கியமாக சரும புற்றுநோய் வராமல் தடுப்பதில் க்ரீன் ஆப்பிளுக்கு மிக முக்கியப் பங்குண்டு.
நீரிழிவு நோயாளியும் சாப்பிடலாம்

