மரண தருவாயில் இருந்து தப்பித்த தவளை - பாம்பிடம் உயிர் தப்பிய வைரல் வீடியோ!
இணையத்தில் அன்றாடம் ஏதாவது ஒரு வீடியோ காட்சி வைரலாவது உண்டு. அதிலும் பாம்புகள் வீடியோ பார்வையாளர்களிடம் அதிகம் கவனம் பெறுகின்றன.
அந்த வகையில், குறிப்பிட்ட வீடியோவில் வீட்டு கேட்டின் மீது இருக்கும் தவளையை கருநிற பாம்பு வாயால் கவ்விவிடுகிறது.
ஆனால், தப்பிக்க தவளை விடா முயற்சி செய்கிறது.2 நிமிடங்களுக்கு மேல் தொடர் முயற்சி செய்யும் தவளை ஒரு வழியாக பாம்பிடம் இருந்து தப்பித்து ஓடிவிடுகிறது.
இந்த வீடியோ இணையவாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. உயிர்போகும் ஆபத்து வந்தால்கூட விடா முயற்சியுடன் செயல்பட்டால் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்பதை தவளை உணர்த்தியிருப்பதாக நெட்டிசன்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.
What is life.... Never give up!!pic.twitter.com/P2ndirIdL4
— Figen (@TheFigen) April 1, 2022