பாய்ந்து வந்த முதலையை தோசைக்கல்லால் அடித்து விரட்டிய பாட்டி! சிலிர்க்க வைக்கும் காட்சி
ஆவேசமாக பாய்ந்து வந்த முதலையை முதியவர் ஒருவர் தோசைக் கல்லால் அடித்து காட்டுக்குள் அனுப்பும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பாய்ந்து வந்த முதலை
வயதானவர்கள் என்றாலே ஏதாவது பேசிக்கொண்டு, கிடைப்பர்வர்களுக்கெல்லாம் அறிவுரை கூறிக் கொண்டு இருப்பார்கள் என்ற எண்ணம் தான் முதலில் அனைவருக்கும் வரும்.
ஆனால், அவர்கள் ஆவேசமானால் அவர்களை யாரும் கட்டுப்படுத்த முடியாது என்பதை அவ்வப்போது யாராவது நிரூபித்துக் கொண்டு தான் உள்ளனர்.
விலங்குகள் அதிகமாக நடமாடும் ஆஸ்திரேலியா நாட்டில் வசிப்பவர்கள் விலங்குகளை விரட்ட எப்போதும் ஆயுதங்களை வைத்திருப்பர். ஆனால், சில நேரங்களில் எதிர்பாராத நேரத்தில் விலங்குளை எதிர்க்க ஆயுதங்கள் கிடைக்காது.
அப்போது, கையில் கிடைத்த பொருட்களைக் கொண்டு தான் நிலைமையை சமாளிக்க வேண்டும். அது போன்ற ஒரு சம்பவத்தின் வீடியோ தான் தற்போது வைரல் ஆகி வருகின்றது.

வயதான பாட்டியின் வீரம்
ஆஸ்திரேலியாவின் வடக்கு பகுதியைச் சேர்ந்த ஒருவர், தன்னை ராட்சத முதலை தாக்க வந்த போது, கையில் இருந்த தோசைக் கல்லையே ஆயுதமாக மாற்றி இருக்கிறார்.
வாயைப் பிளந்து ஆவேசமாக கடிக்க வரும் முதலையைக் கண்டு துளியும் அஞ்சாமல் தோசைக் கல்லைக் கொண்டு முதலையின் தலையில் அடிக்க, அந்த முதலை அப்படியே திரும்பி காட்டிற்குள் சென்றுவிட்டது.
முதியவரின் தைரியத்தையும், தோசை கல்லால் பாட்டி முதலையை அடித்து விரட்டிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.