தாத்தாவால் கர்ப்பமான பேத்தி: மருத்துவமனையில் அரங்கேறிய கொடூரம்
தாத்தாவால் கர்ப்பமான பேத்தியின் கருவை சத்தமில்லாமல் கலைத்த செவிலியர் தற்போது வசமாக சிக்கியுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் செல்லங்குப்பத்தை சேர்ந்தவர் முனியாண்டி. இவர் பேத்தியை ஆசை வார்த்தை கூறி வன்புணர்வு செய்துள்ளார்.
இந்நிலையில் பேத்தி கர்ப்பமானார். நாளுக்கு நாள் வயிறு பெரிதாகவே, சிறுமியை அழைத்துக்கொண்டு அப்பகுதியில் வசிக்கும் இந்திராணி என்ற பெண்ணிடம் சென்றுள்ளார்.
குறித்த பெண் ஓய்வுபெற்ற நர்ஸ் ராஜாமணியிடம் அழைத்து சென்றதோடு, அங்கு கருக்கலைப்பு செய்து குழந்தை இறந்து பிறந்துள்ளது. பின்பு குழந்தையை தாத்தாவிடம் கொடுத்து புதைக்கக்கூறியுள்ளனர்.
தகவல் வெளியில் தெரியாது என்று நினைத்தவர்களுக்கு, ஊர் முழுவதும் இந்த தகவல் பரவியதையடுத்து, பொலிசாரும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
முனியாண்டி, ராஜாமணி, இந்திராணி ஆகியோர் மீது 4 பிரிவுகளின் போக்சோ வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனாலும் ராஜாமணி மீது வழக்கு பதிவு செய்யாமல் இருப்பதற்கு பணம் கொடுக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யாமல் பொலிசார் இருந்துள்ளனர்.
பின்பு இதனை அறிந்த தலைமை காவலர், குறித்த பொலிசை பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.