உண்மையான காதலுக்கு வயது முக்கியமில்லை: மில்லியன் கணக்கான இதயங்களை வென்ற காட்சி..!
காதல் என்பது கடவுள் படைத்த ஒரு அற்பதமான உணர்வு. இது வெறும் உணர்வு மட்டுமல்ல அதில் ஏகப்பட்ட அன்பும் அக்கறையும் தன்னாலே அடங்கி விடும்.
காதலனும் காதலியும் தங்களின் உணர்வுகளை விதவிதமாக பரிமாறிக்கொள்ளும் ஒரு அற்புதப்படைப்பே இந்தக் காதல். காலம் காலமாக சாதி, மதம், இனம், அழகு இப்படி எதுவும் பார்க்காமல் தோன்றி இறுதிவரை வாழ்வது தான்.
அப்படி தள்ளாத வயதிலும் பிரியாத காதல் கொண்டு இன்னும் அதீத காதலோடு இருந்தால் அதை தவிர வேறு என்ன இருக்கப் போகிறது. அப்படியான ஒரு காதல் வீடியோ ஒன்றுதான் இணையத்தில் தற்போது வட்டாரமிட்டுக் கொண்டிருக்கிறது.
குறித்த வீடியோவில் ஒரு வயதான பாட்டி தன் வயதான கணவரை ஒரு இடத்தில் நிற்க வைத்து விட்டு முன்னாள் வரும் பேருந்தை நிறுத்துவதற்காக ஓடிப்போய் பாதை நடுவில் நின்று தன் கணவனை அழைத்துச் செல்கிறார்கள்.
இந்த வீடியோ பலருக்கும் பிடித்துப்போக அனைவரும் இந்த வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள். மேலும், எப்படி வாழ்ந்தாலும் தள்ளாத வயதிலும் இப்படியான காதல் தான் வேண்டும் என்றும் பதிவிட்டு வருகிறார்கள்
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |