அந்தரத்தில் அசால்ட்டாக சைக்கிள் ஓட்டும் பாட்டி! வைரல் காணொளி இதோ
60 வயதைக் கடந்த மூதாட்டி ஒருவர் அந்தரத்தில் தொங்கும் கம்பியின் மீது அசால்ட்டாக சைக்கிள் ஓட்டி அசத்திய காணொளி ரைவலாகி வருகின்றது.
அந்தரத்தில் சைக்கிள் ஓட்டிய மூதாட்டி
சாதனை செய்வதற்கு வயது ஒன்றும் தடையாக இருப்பதில்லை என்பதை அவ்வப்போது பல முதியவர்கள் நிரூபித்து வருகின்றனர்.
இங்கு 67 வயதான பாட்டி ஒருவர் மஞ்சள் நிற புடவையில், துணிச்சலுடன் சைக்கிள் ஓட்டியுள்ளார். அதுவும் சாதாரண சைக்கிள் கிடையாது,... தலையில் முகக்கவசம் மற்றும் பாதுகாப்பு கியர் அணிந்து உயரமாக கட்டப்பட்டிருந்த மெல்லிய கம்பியில் சைக்கிள் ஓட்டி அசத்தியுள்ளார்.
இதனை அவதானித்த நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை தெரிக்க விட்டுள்ளனர். இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமனில் பகிர்ந்த ஒருவர், “எனக்கு பயமில்லை மகனே, நான் சைக்கிள் ஓட்டுவேன். நீ என்னுடன் வா என்று சொல்லி 67 வயதில் தன் ஆசையை நிறைவேற்ற அந்த அம்மா எங்களிடம் வந்தார்.
அதை நாங்கள் நிறைவேற்றிவிட்டோம்” எனக் கூறியுள்ளார். “பாட்டி கொஞ்சம்கூட பயப்படவே இல்லை. சவாலை முடிக்கும் வரை உறுதியாக இருந்தார்” என்றும் அவர் கூறியுள்ளார்.