எதிர்வீட்டு பெண்ணை சீண்டிய முதியவர்: முதியவரைக் காப்பாற்ற வந்த பாட்டி மரணம்
பண்ருட்டி அருகே எதிர்வீட்டு பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற கொழுந்தனாரை உறவினர்கள் தாக்கியபோது, அவரை காப்பாற்ற சென்ற அண்ணி அடித்துக் கொல்லப்பட்டார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கருக்கை கிராமத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சாரங்கபாணி. சம்பவத்தன்று அதிக அளவு மது அருந்தியிருந்த சாரங்கபாணி, தனது எதிர் வீட்டில் வசித்து வந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற நிலையில் அப்பெண் கத்தி கூச்சலிட்டுள்ளார்.
இதனை கண்ட அருகில் வசித்து வந்த சதீஷ், தனவேல் ஆகியோர் அங்கு சென்று சாரங்காணியை பிடித்து சரமாரியாக தாக்கி உள்ளனர். அப்போது, சரங்கபாணியின் அண்ணி ராசாத்தி அவர்களை தடுக்க முயன்றுள்ளார்.
அப்போது, சதீஷூம், தனவேலும் தாக்கியதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்த காடாம்புலியூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராசாத்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய சதீஷ், தனவேல் ஆகியோரை பொலிசார் தேடி வருகின்றனர்.