கிராமி விருது விழாவில் மாஸ் காட்டிய பெண்: பட்டுப்புடவையில் ஜொலிக்கும் அழகி
விருதுகள் வழங்கும் விழாவுக்கு இந்திய இசைக்கலைஞர் ஒருவர் அனைவரையும் ஈர்க்கும் வகையில் பட்டுப்புடவை அணிந்து சென்றிருக்கிறார்.
இவரின் புகைப்படங்கள் தற்போதும் பெரும் வைரலாகி வருகிறது.
கிராமி விருது 2023
அமெரிக்க ஐக்கிய நாடுகள் இணைந்து அந்த நாட்டில் உள்ள இசை கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிகவும் முக்கியமான விருதுகளில் ஒன்று தான் கிராமி விருது.
இந்த விருது 1951 ஆம் ஆண்டு இருந்து இசைத்துறையில் சாதனை படைத்தோருக்காக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2023 ஆண்டுக்கான கிராமி விருது விழா இந்த மாதம் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸில் என்ற இடத்தில் நடைபெற்றது.
கலக்கலான உடை
அமெரிக்காவில் உள்ள பெர்க்லீ இசைக் கல்லூரியின் நிறுவனரான அனெட் பிலிப், கேரளாவை பூர்வீகமாக கொண்டவர்.
இவரின் பெர்க்லீ இந்தியன் குழுமம், ஷுருஆத் என்ற தலைப்பில் உருவாக்கிய ஆல்பம் சிறந்த உலகளாவிய ஆல்பம் என்ற பிரிவில் கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
இதனால் இந்த விருது விழாவிற்கு தனது குழுவினருடன் அனெட் பிலிப் சென்றிருந்தார். இநநிகழ்ச்சிக்கு சென்ற வேளையில், சிவப்பு நிற காஞ்சிபுரம் பட்டு சேலையையும், தென்னிந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையிலான நகைகளையும் அணிந்திருந்தார்.
இதைப்பார்த்த அந்நாட்டுக்காரர்கள் அவரின் ஆடைக்குறித்தும் அவர் குறித்து வர்ணித்து பேசியிருப்பார்கள்.
அதில் அவர் தெரிவித்ததாவது, இந்த ஆடை, அணிகலன்களை அணிவதில் தான் மகிழ்ச்சி அடைவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.