Gpay-ல் பணம் இல்லையா? கூகுள் கொடுக்கும் கடன்! மகிழ்ச்சியில் மக்கள்
கூகுள் நிறுவனம் தனது Payment செயலியான Google Pay-ல் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் நாடுகளில், அதிக யுபிஐ செயலிகள் பயன்படுத்தும் நாடாக இந்தியா முன்னணியில் இருக்கிறது.
குறிப்பாக கூகுள் நிறுவனத்தின் கூகுள் பே செயலி இந்தியாவில் முன்னணி பணப்பரிவர்த்தனை செயலியாக உள்ளது.
இந்நிலையில் பேமெண்ட்களை இன்னும் எளிதாக்க 'Buy Now Pay later' என்ற அம்சத்தினை வெளியிட்டுள்ளது. அதாவது பயனரின் வங்கிக் கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் கடைக்காரரிடம் பணம் செலுத்தலாம். இந்த அம்சத்தை எப்படி பயன்படுத்துவது என்பதை தெரிந்து கொள்வோம்.
கூகுள் கொடுக்கும் கடன்
நீங்கள் அவசரமாக பொருட்களை வாங்கிவிட்டு, Google Pay செய்யும் போது உங்களது கணக்கில் பணம் இல்லாமல் இருக்கும். இவ்வாறான நெருக்கடி சூழ்நிலையை பலரும் எதிர்கொண்டு வரும் நிலையில், இதற்கான தீர்வை கூகுள் கொடுத்துள்ளது. கூகுள் பே செயலியில் 'Buy Now Pay later' அம்சம் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில், இதில் குறிப்பிட்ட தொகையை கடனாக பெற்று பின்னர் செலுத்த முடியும்.
Google Wallet
வாலட் செயலியை கூகுள் சில நாட்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது. மக்கள் அதிகம் பயன்படுத்தும் டிஜிட்டல் வாலட் இது. இதில் நீங்கள் அனைத்து கார்டு விவரங்களையும் சேர்க்கலாம்.
ஒருமுறை இதைச் செய்தால், பிறகு அதிக டென்ஷன் ஆக வேண்டியதில்லை. இதை பேமெண்ட் ஆப்ஸுடன் இணைத்து, ஈஸியாக கட்டணங்களை செலுத்திக் கொள்ளலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |