குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறும் ஜிபி முத்து?
பிக்பாஸில் கலந்து கொண்ட ஜிபி முத்து உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது குக் வித் கோமாளியில் இனிமேல் கோமாளியாக வரமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஜி பி முத்து
பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் கோமாளியாக வந்திருக்கிறார் ஜிபி முத்து.
அவர் கடந்த வாரம் உடல்நல குறைவு காரணமாக திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனால் அவர் CWC நிகழ்ச்சிக்கும் வரவில்லை.
இனி வர மாட்டாரா?
ஜிபி முத்து இனி குக் வித் கோமாளிக்கு வருவாரா இல்லையா என ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர். இந்நிலையில் தற்போது ஜிபி தனது உடல்நிலை பற்றி வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
சிகிச்சை முடிந்தாலும் தற்போது மாத்திரை சாப்பிட்டு கொண்டிருக்கிறேன் என அவர் கூறி இருக்கிறார். மேலும் இந்த மாத இறுதியில் மீண்டும் ஷோ ஷூட்டிங்கில் பங்கேற்பேன் என்றும் கூறி இருக்கிறார்.