திருநங்கையாக மாறிய ஜி பி முத்து... வைரல் புகைப்படம் இதோ
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான ஜி பி முத்து தற்போது திருநங்கை போன்று வெளியான புகைப்படம் வைரலாகி வருகின்றது.
ஜி பி முத்து
டிக் டாக் மூலம் பிரபலமான ஜி பி முத்து கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாதியிலேயே வெளியேறினார்.
உடன்குடியைச் சேர்ந்த இவர் மரப்பொருள் விற்பனையாளராக இருந்த நிலையில், அது தடை செய்யப்பட்டதால் தனியார் தொலைக்காட் நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தார்.
பின்பு தனக்கு வந்த கடிதங்களை படித்து காட்டி அந்த காணொளியினை வெளியிட்டு அதிக பார்வையாளர்களை கவர்ந்தார்.
பின்பு கடை திறப்பு விழா, கல்லூரி நிகழ்ச்சிகள் என பங்கேற்று வந்த இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.
அங்கு மகன் ஞாபகத்தால் சில தினங்களிலேயே திரும்பி வந்தார். பிக்பாஸ் சென்று வந்த பின்பு பயங்கர பிஸியாகிய இவர், சமீபத்தில் 12 லட்சம் மதிப்புள்ள kia கார் ஒன்றினை வாங்கியுள்ளார்.
தற்போது ஜி பி முத்து ஆர்வன் என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஜி பி முத்துவின் போஸ்டர் தற்போது வெளியாகி வைரலாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |