பார்க்க அழகா இருக்காங்க... ஆனால் மூளை இல்லை! பிக் பாஸில் அதிரடி நாமினேஷன்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் ஆரம்பித்துள்ள நிலையில், போட்டியாளர்கள் கடுமையாக மோதிக் கொள்கின்றனர்.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் கடந்த 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் முதல் நபராக அனன்யா வெளியேற்றப்பட்டார்.
பின்பு பவா செல்லத்துரை வீட்டில் இருப்பது பிடிக்காமல் பிக்பாஸிலிருந்து வெளியேறினார். இரண்டு வீடாக இருக்கும் இந்த நிகழ்ச்சியில் பிரச்சினையும் இரண்டாகவே இருந்து வருகின்றது.
இந்த வார தலைவராக யுகேந்திரன் இருந்து வருகின்றார். இவரால் இந்த பிக்பாஸ் தலைமைத்துவம் நன்றாக இருக்கும் என்று பார்வையாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
கடந்த வார பிரச்சினையை கடந்த சனி, ஞாயிறு இரு தினங்கள் கமல்ஹாசன் வந்து தீர்த்து வைத்து சென்றுள்ளார். தற்போது மீண்டும் பிரளயம் ஆரம்பித்துள்ளது.
நாமினேஷன் நிகழ்வு ஏற்பட்டுள்ள நிலையில் போட்டியாளர்கள் ஒருவரையொருவர் சரமாரியாக குற்றம் சாட்டி நாமினேட் செய்து வருகின்றனர்