யூடியூப் வருமானத்தில் பல லட்சத்திற்கு கார் வாங்கிய ஜி.பி.முத்து: காரின் விலை எவ்வளவுன்னு தெரியுமா?
தற்போது மிகவும் பிரபலமடைந்து வரும் ஜிபி முத்து தற்போது புதிய கார் வாங்கிய தகவல் தற்போது மிகவும் வைரலாகி வருகின்றது.
ஜி.பி.முத்து
சமூக வலைத்தளங்கள் மூலம் பிரபலமான ஜி.பி.முத்து பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராகவும் கலந்து கொண்டிருந்தார்.
போட்டியில் ஒரு வாரம் மட்டுமே கலந்து கொண்டிருந்தாலும் அனைவரின் மனதையும் கவர்ந்து விட்டார், இவர் கடிதத்தை படித்து கமெண்ட் சொல்லும் வீடியோ தான் இளைஞர்களை அதிகம் விரும்பி பார்ப்பார்கள்.
இதனாலே இவருக்கு பெரிய பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்நிலையில் குத் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் ஒரு கோமாளியாகவும் கலந்து கொண்டு இன்னும் பிரபலமானார்.
கார் வாங்கிய ஜி.பி.முத்து
தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சி மட்டுமல்லாது பல படங்களில் நடித்து வரும் ஜி.பி.முத்து பம்பர் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில், இவர் பல கோணங்களில் கலக்கி வருகின்ற நிலையில், புதிய கார் ஒன்றை வாங்கி அதற்கு கோவிலில் வைத்து பூஜை செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |