சாம்சங் போன் பயனர்களுக்கு ஆபத்து... அரசு விடுத்த எச்சரிக்கை! உடனே இதை செய்திடுங்க
சாம்சங் போன் பாவித்து வரும் பயனர்களுக்கு மத்திய அரசு ஒரு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.
சாங்சங் போனில் பாதுகாப்பு குறைபாடு
CIVIN-2023-0360 -இல் ஆண்ட்ராய்டு 11, 12, 13 மற்றும் 14 ஒ.எஸ் கொண்ட சாம்சங் போன்களை பயன்படுத்தும் பயனர்களுக்கு இந்த மொடல்களில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக மத்திய அரசின் கம்யூட்டர் மத்திய அரசின் Computer Emergency Response Team தெரிவித்துள்ளது.
இந்த பாதுகாப்பு குறைபாடானது குறித்த மொடல் வைத்திருக்கும் பயன்ர்களின் தகவல்களை ஹேக்கர்கள் மிகவும் சுலபமாக அபகரிக்கும் வசதியை வழங்குவதாகவும், பல ஆபத்துக்களை விளைவிக்கும் என்று சிஈஆர்டி யின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு 11, 12, 13, 14 ஓ.எஸ், சாம்சங் கேலக்ஸி எஸ் 23 சீரிஸ், கேலக்ஸி ஃப்ளிப் 5, கேலக்ஸி ஃபோல்டு 5 போன்ற பல்வேறு மாடல்களுக்கும் ஆபத்தை உண்டாக்கக்கூடும்.
பாதிப்புகளை தடுக்க என்ன செய்வது?
சாம்சங் பயனாளர்கள் தங்கள் மொபைல்களில் அடிக்கடி Security Updateகளை செய்து கொள்வது நல்லது.
Settings- Software Update - Download and Install போன்ற ஆப்ஷன்களை க்ளிக் செய்வதன் மூலம் அப்டேட் செய்து கொள்ள முடியும்.
புதிதாக ஒரு செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் எனில் அதனை கூகுள் பிளே ஸ்டோரை தவிர்த்து வேறு எந்த செயலி மூலமும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம். சாம்சங் கொடுக்கும் அப்டேட்களை தாமதப்படுத்தாமல் அவ்வப்போது அப்டேட் கொடுத்துக்கொள்ளவும்.
அறிமுகமில்லாத நபர்களிடமிருந்து வரும் மின்னஞ்சல்கள், குறுந்தகவல்களை க்ளிக் செய்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் நீங்கள் சாதாரணமாக க்ளிக் செய்யும் பொழுது, அந்த இணைப்புகள் மூலம் உங்களது தனிப்பட்ட தகவல்களை திருடும் வாய்ப்பு மிக அதிகமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |