சொடக்கு மேல சொடக்கு போடுது பாட்டுக்கு சூப்பராக டான்ஸ் ஆடிய தமிழ் டீச்சர்!
அரசுப் பள்ளி தமிழ் ஆசிரியை ஒருவரின் செயல் இணையத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூர் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் ஆகப் பணியாற்றுபவர் கவிதா.
அவர் நீண்ட நாட்களுக்குப் பின்னர் பள்ளிக்குத் திரும்பி உள்ள மாணவர்களை உற்சாகப்படுத்தி கற்றலை புகுத்த புதிய யுத்தி ஒன்றை கையாண்டுள்ளார்.
மாணவர்களின் நினைவாற்றலை அதிகரிக்க நடிகர் சூர்யா நடித்து வெளியாகி பிரபலமான 'சொடக்கு மேல சொடக்கு போடுது' பாடல் நடன அசைவுகளைப் பயன்படுத்தி உள்ளார்.
இதை வைத்து 'க, ங, ச...' பயிற்றுவித்து அசத்தியுள்ளார். மாணவர்கள் உற்சாகமாக பாடங்களைக் கற்க ஆசிரியை கவிதா நடனத்தை ஒரு உத்தியாகக் கையாண்ட விதம் பலரது பாராட்டுக்களை பெற்று வருகின்றது.