நடுரோட்டில் மாறி மாறி அடித்துக்கொண்ட மாணவர்கள்.. வைரலாகும் காட்சி
அரசு பள்ளியில் படிக்கும் சில மாணவர்கள் பொது இடங்களில் சண்டையிட்டு கொள்வது, பேருந்து படிக்கட்டில் தொங்கிய படி செல்வது, ஆசிரியரை மிரட்டி தாக்குவது உள்ளிட்ட ஒழுங்கின செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
அரசுப் பள்ளி மாணவர்கள் இரு குழுக்களாக பிரிந்து சாலையில் ஒருவரையொருவர் அடித்துக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒழுங்கின செயல்
அரசு பள்ளியில் படிக்கும் சில மாணவர்கள் பொது இடங்களில் சண்டையிட்டு கொள்வது, பேருந்து படிக்கட்டில் தொங்கிய படி செல்வது, ஆசிரியரை மிரட்டி தாக்குவது உள்ளிட்ட ஒழுங்கின செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
சனிப்பெயர்ச்சியை தொடர்ந்து சூர்ய கிரகணம்: யாருக்கு ஆபத்து? மகிழ்ச்சியடையும் ராசிகள் இதோ
நடுரோட்டில் சண்டை
இந்நிலையில், கோவை ஒண்டிப்புதூர் பேருந்து நிறுத்தம் அருகே அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரு குழுக்களாக பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இதனால் பேருந்து நிறுத்தத்தில் இருந்த பள்ளி மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து ஒதுங்கி நின்றனர். இதனை காரில் சென்ற நபர் ஒருவர் செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.