10ம் வகுப்பு மாணவர் அடித்து கொலை! சக மாணவர்கள் நிகழ்த்திய வெறிச்செயல்
10ம் வகுப்பு மாணவர் ஒருவரை சக மாணவர்கள் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் திருச்சியில் நடந்துள்ளது.
கற்களை தூக்கி வீசிய மாணவர்கள்
திருச்சி மாவட்டம், முசிறி அருகே தொட்டியம் பால சமுத்திரம் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளியில், தோளூர் பட்டியைச் சேர்ந்த கோபி என்பவரின் மகன் மௌலீஸ்வரன் 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
வழக்கம் போல் நேற்று பள்ளி வளாகத்தில் அமர்ந்து படித்துக்கொண்டிருக்கையில், சிறு சிறு கற்களை தூக்கிப் போட்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது மௌலீஸ்வரன் தான் கற்களை வீசியுள்ளான் என்று தவறாக புரிந்து கொண்ட, மற்ற மாணவர்கள் மூன்று பேர் சேர்ந்து கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த மௌலீஸ்வரனை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டுள்ளது.
மேல் சிகிச்சைக்கு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், மருத்துவர்கள் குறித்த மாணவன் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளார்..
மாணவன் இறப்புக்கு நியாயம் கேட்டு பெற்றோர்கள், சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பின்பு ஆசிரியர்கள் மூன்று பேரை பொலிசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.