மாணவியின் அட்டகாசமான குரல்.. பள்ளிக்கல்வித்துறை பகிர்ந்த வைரல் வீடியோ
அரசு பள்ளி மாணவி ஒருவர் பாடிய பாடலை தமிழக பள்ளிக் கல்வித்துறை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில், நெட்டிசன்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.
பள்ளி மாணவியின் பாடல்
தமிழக அரசு பள்ளிகளில் 'கலை திருவிழா' நடத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சமீபத்தில் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் தமிழகத்தில் இயங்கி வரும் உயர்நிலை, நடுநிலை, மேல்நிலை பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கலைத்திருவிழாவில் கலந்து கொண்டு திறமையினை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஓவியம், புகைப்படம் எடுத்தல், களிமண் சிற்பம், மெல்லிசை, செவ்வியல் இசை என அனைத்து போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், இதில் முதல் இருபது இடங்களை பிடிக்கும் மாணவிகள் வெளிநாட்டுக்கு சுற்றுலாவிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது அரசு பள்ளி மாணவி ஒருவர், தென்றல் வந்து தீண்டும் போது என்ற பாடலை பாடியுள்ள காணொளியினை தமிழக பள்ளிக் கல்வித்துறை அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
எவரும் சொல்லாமலே...#TNGovtSchoolsKalaiThiruvizha |#Students | #Education | #Teachers | #GovtSchools | #TNSED | #TNGovtSchools | #TNEducation | #பள்ளிக்கல்வித்துறை @Anbil_Mahesh pic.twitter.com/z1ZxlckhBj
— தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை (@tnschoolsedu) December 12, 2022