பதவி விலகல் கடிதம்... மாலத்தீவு தப்பிச்சென்ற இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்துவரும், நேரத்தில் மக்கள் பெரிய போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
அதன்பின்னர், அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இலங்கை நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது.
கோத்தபய ராஜபக்சே வீட்டை ஆக்கிரமித்த போராட்டக்காரர்கள் ருவதற்கு முன்பு அதிபர் கோத்தபய ராஜபக்சே அங்கிருந்து வெளியேறினார். அவர் நாட்டை விட்டு தப்பி விட்டதாக தகவல் வெளியானது.
ஆனால், கோத்தபய இலங்கையில்தான் இருப்பதாக சபாநாயகர் தெரிவித்தார். அதன் பின் அதிபர் கோத்தபய ராஜபக்சே ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே இலங்கையில் இருந்து தப்பிச்சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
விமானப்படை விமானம் மூலம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மாலத்தீவு தப்பிச்சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர் தனது குடும்பத்தினருடன் மாலத்தீவு தப்பிச்சென்றுள்ளார்.