உடல் முழுவதும் முடி வளர்ந்து கொரில்லா போன்று மாறிவரும் குழந்தை: காரணம் என்ன?
அமெரிக்காவில் டெக்சாஸ் பகுதியில் நான்கு மாத குழந்தை மேடியோ பெர்னாண்டஸ்க்கு உடல் முழுவதும் முடி வளர்ந்திருக்கிறது.
மேடியோ பெர்னாண்டஸ் ஒரு மாத குழந்தையாக இருந்தபோது பிறவி சைபர் இன்சுலினசம் இருப்பது தெரியவந்தது. இந்த அரிய நோயானது கணையத்தில் அதிக அளவு இன்சுலின் உற்பத்தி செய்யும் அல்லது ஆபத்தான ரத்த சர்க்கரை குறைவை ஏற்படுத்தும் என்பதால் குழந்தை மேடியோ, டெக்சாஸ் குழந்தைகள் மருத்துவமனையில் உள்ள அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருக்கிறான்.
அங்கு உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்குப் பின்னர் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனாலும் அதன் பின்னர் பெற்றோர்கள் மருந்தினால் பக்கவிளைவு ஏற்பட்டதை கவனித்தனர்.
உயிர் காக்கும் மருந்துகள் உட்கொண்ட சில வாரங்களுக்குப் பின்னர் குழந்தையின் உடல் மாறத்தொடங்கியது. முடி வளர்தல் முதலில் குழந்தையின் தலை மற்றும் நெற்றியில் தொடங்கியது. பிறகு குழந்தையின் கால்கள், கைகள், முதுகு, வயிறு, தொடை என்று எல்லா இடங்களிலும் முடி வளர்ந்தது.
குழந்தை பிறந்த போது தலை வழுக்கையாக இருந்திருக்கிறது. ஆனால் சில வாரங்கள் மருந்து உட்கொண்ட பின்னர் கொரில்லா போல அவன் மாறி விட்டான் என்று பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
குழந்தைக்கு மொட்டை அடிக்க முடியுமா என்று பெற்றோர்கள் மருத்துவர்களிடம் கேட்டபோது, அது பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று அறிவுறுத்தியிருக்கின்றனர்.
இந்த நோய் அரிதாக இருப்பதால் மருத்துவர்கள் என்ன செய்வது என்று ஆலோசித்து வருகின்றனர்.