பாக்கியாவிற்கும் எனது மகனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறன்... கோபியை நடுநடுங்க வைத்த பாட்டி
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவை பழனிச்சாமிக்கு திருமணம் செய்து வைப்பதாக பழனிச்சாமியின் தாய் கோபியிடம் நேருக்கு நேராக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னனியில் இருந்து வருகின்றது.
தாலியை கழற்ற துணிந்த நந்தினி.. கன்னத்தில் பளார்னு விட்ட விசாலாட்சி! எதிர்நீச்சலின் எதிர்பாராத திருப்பம்
பாக்யாவை வேண்டாம் என்று அவரை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து ஒரே வீட்டில் வசித்து வந்த கோபி பாக்கியாவின் சவாலில் தோல்வியடைந்து வீட்டை விட்டு வெளியேறினார்.
இனியா சேர்ந்த கல்லூரியில் பாக்கியாவும் கல்லூரியில் சேர்ந்துள்ள நிலையில், சமீபத்தில் மகளை சுற்றுலா அழைத்துச் சென்று பல பிரச்சினைகளில் சிக்கி மீண்டுள்ளார்.
பழனிச்சாமியுடன் திருமணமா?
இந்நிலையில், கோபி பழனிச்சாமியின் வீட்டில் வந்து சத்தம் போடவே, பதிலுக்கு பழனிச்சாமியும் சத்தம் போட்டுள்ளார்.
ஆனால் இடையில் பழனிச்சாமியின் அம்மாவும் வந்து கோபியிடம் சண்டையிட்டுள்ளார். இவர்களின் வாக்குவாதம் அடுத்தடுத்து சென்ற நிலையில், இறுதியில் பாட்டி பகீர் முடிவை கூறியுள்ளார்.
ஆம் வாக்குவாதத்தின் முடிவில் நாளைக்கே பாக்கியாவிற்கும், எனது மகனுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறன்... என்று கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
பாட்டியின் இந்த பேச்சைக் கேட்ட கோபி ஒரு நிமிடம் ஆடிப்போயுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |