baakiyalakshmi: பழனிச்சாமியை கல்யாணம் போறியே வெட்கமா இல்லை? பாக்கியாவிடம் கோபி அதிரடி
பாக்கியலட்சுமி சீரியலில் கோபி பாக்கியாவை கடுமையாக திட்டியுள்ளார். இதற்கு காரணம் பழனிச்சாமியின் அக்கா கூறிய திருமண விடயம் தான்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னணியில் இருந்து வருகின்றது.
வீட்டில் எந்தவொரு பிரச்சினையாக இருந்தாலும் சமாளித்து கெத்து காட்டி வருகின்றார் பாக்கியா. ராதிகாவின் கர்ப்பத்தால் கோபியை அனைவரும் வீட்டை விட்டு வெளியேற்றிய நிலையில் கோபியுடன் சேர்ந்து அவரது அம்மா ஈஸ்வரியும் வெளியேறியுள்ளார்.
ராதிகாவின் வீட்டில் ஈஸ்வரி பல சிக்கல்களை அனுபவித்து வருகின்றார். தற்போது ராதிகாவின் கர்ப்பம் எதிர்பாராத விதமாக கலைந்துள்ளது.
ஈஸ்வரியை குற்றம் சுமத்திய ராதிகா
தான் கீழே விழுந்து கர்ப்பம் கலைவதற்கு ஈஸ்வரிகாரணம்என்று ராதிகா குற்றம் சுமத்தியுள்ளார். இதனை கோபியும் நம்பி அவரது தாயை சத்தம் போட்டுள்ளார்.
இதற்கிடையே இனியாவின் பிறந்தநாளுக்கு பழனிச்சாமி குடும்பத்தினர் வருகை தந்துள்ளனர்.அப்பொழுது பாக்கியாவிற்கும், பழனிச்சாமிக்கும் திருமணம் செய்து வைப்பது குறித்து பழனிச்சாமியின் அக்கா கூறியுள்ளார்.
இதனைக் கேட்டு வந்த கோபி பாக்கியாவிடம் கடும் கோபத்தில் கொந்தளித்துள்ளார். இதுவரை திருமணம் விவகாரம் தெரியாமல் இருந்த பாக்கியா கடும் அதிர்ச்சியில் உள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |