உடல் எடையை ஆரோக்கியமாக குறைக்கும் நெல்லிக்காய் ஜீஸ்.. யாரெல்லாம் குடிக்கலாம்?
பொதுவாக சிலர் உடல் எடையை எப்படி ஆரோக்கியமான முறையில் குறைப்பது என தெரியாமல் புலம்பிக் கொண்டிருப்பார்கள்.
எந்த விதமான பக்க விளைவுகளும் இல்லாமல் சில உணவுகளை கட்டுபடுத்துவதாலும், சில உணவுகளை சாப்பிடுவதாலும் எடையை ஆரோக்கியமாக குறைக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
எடை அதிகமாக இருப்பவர்கள் காலையில் எழுந்தவுடன் டீ, காபி குடிக்காமல் நெல்லிக்காய் ஜீஸ் எடுத்து கொள்ளலாம். இது ஆரோக்கியம் தருவதுடன் எடையையும் கணிசமாக குறைக்கின்றது.
அந்த வகையில் எடையை விரைவாக குறைக்கும் நெல்லிக்காய் ஜுஸ் எப்படி செய்வது என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
- பெரிய நெல்லிக்காய்- 1 நறுக்கியது
- இஞ்சி- 1 துண்டு (தோல் நீக்கியது)
- கறிவேப்பிலை- சிறிதளவு
ஜுஸ் செய்முறை
1. நெல்லிக்காய், இஞ்சி, கறிவேப்பிலை ஆகிய நன்றாக கழுவி மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
2. அரைத்து எடுத்த பேஸ்ட்டை மோர் அல்லது தண்ணீர் கலந்து குடிக்கவும்.
3. காலை எழுந்தவுடன் டீ, காபிற்கு பதிலாக இந்த ஜுஸை குடிக்கலாம்.
பலன்கள்
- தினசரி வெறும் வயிற்றில் குடித்துவர கபம், வாதம், பித்தம் ஆகியவை சமநிலைப்படும்.
- தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நீங்கும். அதாவது, முடி கொட்டுதல் மற்றும் முடி நரைத்தல் பிரச்சினைகளிலிருந்து விடுபெறலாம்.
- கால்சியம் குறைப்பாட்டால் ஏற்படும் கண்களில் பார்வை குறைபாடு, பற்கள் சொத்தை இவற்றை இந்த ஜுஸ் சரி செய்கிறது.
- நீரழிவு நோயாளர்களும் இந்த சாற்றை காலையில் குடிக்கலாம். இதனால் ரத்த அழுத்தம் குறையும். இன்சுலின் பயன்பாடும் குறையும்.
- செரிமானப்பிரச்சினை, வயிற்றுவலி, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் ஏற்படாது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |