தலைமுடி இளவயதிலே நரைக்குதா? இந்த ஹேர் ஆயில் பயன்படுத்தி பாருங்க
முடி நரைப்பது வயதின் காரணமாக உண்டாகும். ஆனால் தற்போது இளம் வயதுடையோருக்கே இப்போது முடி நரைக்கிறது. இதற்கு காரணம் உடலில் வைட்டமின்கள் குறைவாக இருத்தல் அதிலும் முக்கியமாக வைட்டமின் பி12 குறைவாக இருந்தால், வெள்ளை முடிகள் வரும்.
அதற்காகத் தான் வைட்டமின் அதிகம் நிறைந்திருக்கும் உணவுகளை அதிகம் உண்ண வேண்டும். ஆனால் இது உருவாகியவுடன் உணவு உண்பதில் எந்த பயனும் இல்லை.
இருந்தலும் சிலர் வெள்ளை முடியை கருப்பாக்க பல்வேறு சிகிச்சை முறைகளை மேற்கொண்டாலும் அது பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. இதன் காணமாக இந்த வெள்ளை முடியை எப்படி இல்லாமல் செய்ய முடியும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஹேர் ஆயில்
முடியில் ஏற்படும் பல பிரச்சனைகளை இந்த நெல்லிக்காயில் செய்த ஹேர் ஆயில் பயன்படுத்தினால் நன்மை தரும். இது சேதமடைந்த முடி, சீக்கிரம் நரைத்தல் மற்றும் முடி உதிர்தல் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட ஆண்களும் பெண்களும் பயன்படுத்தலாம்.
இது முடி வளர்ச்சியைத் தூண்டவும், உச்சந்தலையை குளிர்விக்கவும், உங்கள் தலைமுடியை பளபளப்பாகவும் கருமையாகவும் மாற்ற உதவுகிறது. இதை செய்யவதற்கு இரண்டு நெல்லிகாய்களை நான்கு துண்டுகளாக வெட்டி அதை 1 மணி நேரம் உலரவைக்க வேண்டும்.
இந்த காய்ந்த நெல்லிக்காவுடன் 2 தேக்கரண்டி செஸாமீ ஆயில் மற்றும் 4 தேக்கரண்டி எக்ஸ்ட்ரா வர்ஜின் தேங்காய் எண்ணெய் சேர்க்கவும்.
இதை அடுப்பில் கொதிக்க விட்டு ஆறவடவுவும். பின்னர் இதை ஒரு கண்ணாடி போத்தலில் ஊற்றி 1 வாரம் முன்பு, சூரிய ஒளி படாதவாறு குளிர்ந்த இடத்தில் சேமிக்கவும். இதன் பின்னர் இந்த எண்ணெய்யை நீங்கள் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி வரலாம்.
தலைமுடிக்கு நெல்லிக்காயின் பயன்கள்
நெல்லிக்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முடி உதிர்தலில் இருந்து முடியை பாதுகாப்பதுடன், பொடுகு தொல்லையையும் நீக்குகிறது. நெல்லிக்காயை சாப்பிடுவது உச்சந்தலை ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், உச்சந்தலை அரிப்புகளைக் குறைக்கிறது.
மேலும் முடி முன்கூட்டியே நரைக்கும் அபாயத்தைத் தவிர்க்கிறது. நெல்லிக்காயில் விட்டமின் சி நிறைந்து காணப்படுகிறது. இதனால் ஆக்ஸினேற்றியாக இதன் ஆன்டி ஆக்ஸிடன்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் கூந்தலுக்கு ஒரு டானிக் போல செயல்படுகிறது.
இந்த கனியை தினமும் பயன்படுத்தி வந்தால் தலைமுடி மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும். இது மயிர்க்கால்களின் வளர்ச்சிக்கும், கூந்தலின் வலுவான போஷாக்குக்கும் உதவுகிறது.
இதை தவிர முடி வளர்ச்சியை மேம்படுத்த அம்லா அனஜென் படிநிலை உதவுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது நெல்லிக்காய் அதிகம் பங்களிக்கிறது. இதில் காணப்படும் கால்சியம் மற்றும் டானின்கள் முடிகள் முன்கூட்டியே நரைப்பதை எதிர்த்து போராடுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |