கூகுளில் இந்த 4 விடயத்தை மட்டும் தேடாதீங்க.... அப்பறம் சிறை தண்டனை தானாம்
கூகுளில் நாம் தேடக்கூடாத சில விடயங்களைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்றைய காலத்தில் நமக்கு தெரியாத தகவலை கூகுளில் தேடுவது இன்றியமையாததாகிவிட்டது. ஆம் நமது சந்தேகத்தினை உடனே தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும் என்றால் கூகுள் தான் உதவி செய்கின்றது.
ஆனால் இவ்வாறான தேடல்கள் சில தருணங்களில் ஆபத்தை ஏற்படுத்தும். ஆம் கூகுளில் தேடவே கூடாத 4 விடயங்களைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
கூகுளில் தேடக்கூடாத விடயம்
கூகுளில் வெடிகுண்டு தயாரிப்பது எப்படி என்று தேடுவது மிகப்பெரிய கிரிமினல் குற்றமாகும். பாதுகாப்பு அமைப்பு இதனை கவனித்துக் கொண்டு இருக்கும். நாம் இதனை தேடியதை சர்ச் ஹிஸ்ட்ரி செக்யூரிட்டி ஏஜென்சி பார்த்துவிட்டால் நிச்சயம் சிறைக்கு செல்ல வேண்டியிருக்கும்.
குழந்தைகள், பருவ வயதுக்கு வராதவர்கள் இவர்களைப் பற்றிய பாலியல் காணொளிகளை தேடுவதும் குற்றமாகும். இதில் மாட்டிக் கொண்டால் 5 முதல் 7 ஆண்டுகள் சிறைக்கு செல்ல வேண்டியதாயிருக்கும்.
கூகுளில் ஹேக்கிங் டுடோரியல், ஹேக்கிங் சாஃப்ட்வேர் இவை பற்றி தேடுவதும் பிரச்சனையில் கொண்டு போய் விடும். ஹேக் செய்வது எப்படி என்று கூகுளில் தேடினால், சிறை தண்டனை அனுபவிக்க வேண்டியிருக்கும்.
கூகுளில் படம் பார்ப்பதற்கு நாம் தேடும் போது, பைரசி படங்களை தேடுவதும், டவுன்லோடு செய்வதும் குற்றமாகும். இவ்வாறு செய்து மாட்டிக் கொண்டால் 3 ஆண்டுகள் சிறை மற்றும் 10 லட்சம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டியிருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |