கணவனை கொலை செய்வது எப்படி? கூகுளில் தேடிய மனைவி! பரிதாபமாக உயிரிழந்த கணவர்
இந்தியாவில் பெண் ஒருவர் கூகுள் மூலம் கண்டுபிடித்த பிளானை வைத்து கணவனை கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தின் ஹர்தா மாவட்டத்தில் உள்ள கெதிபூர் பகுதியில் தபஸ் என்ற பெண் தன்னுடைய கணவர் அமீருடன் வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் அமீருக்கு மராட்டிய மாநிலத்திற்கு வேலை மாற்றப்பட்டதால், தனியாக இருந்த தபஸுக்கு இம்ரான் என்ற வாலிபருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இருவரும் கணவருக்கு தெரியாமல் தனிமையில் இருந்து தங்களது தொடர்பினை வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதையடுத்து, அமீர் வேலை செய்யும் அலுவலகம் மூடப்பட்டதால், மனைவியை பார்க்க ஊருக்கு வந்துள்ளார்.
அப்பொழுது இர்பானுடன் ஏற்பட்ட பழக்கம் தெரியவரவே மனைவியைக் கண்டித்துள்ளார். இதனால் கணவரை கொலை செய்வதற்கு கூகுளில் சில ஐடியாக்கனை தேடியதோடு. அதன்படி தனது காதலனை அழைத்து அமீருக்கு ஆஸ்துமா மருந்தில் விஷத்தைக் கலந்து கொடுத்துள்ளார்.
பிறகு தபஸும், இர்பானும் கணவர் அமீரின் கை மற்றும் கால்களைக் கட்டி, அவர் இறக்கும் வரை சுத்தியலால் தாக்கி கொலை செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் பொலிசாருக்கு தெரியவரவே, இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.