Google Pixel 9 Series:மொபைலின் அதிரவைக்கும் சிறப்பம்சங்கள் விலை என்ன தெரியுமா?
கூகுள் நிறுவனம் தனது புதிய ரக பிக்ஸல் 9 வரிசை போன்களை அறிமுகம் செய்துள்ளது. அதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
Google Pixel 9
கூகுள் நிறுவனம் தனது புதிய பிக்சல் 9 Pixel 9 சீரிஸ் போன்களை அறிமுகம் செய்துள்ளது.இதன்படி பிக்சல் 9, 9 புரோ, 9 புரோ எக்ஸ்எல் என மூன்று வடிவத்தில் வெளியிட்டுள்ளது. இது கலிபோர்னியாவில் உள்ள மௌண்டைன் வியூ பகுதியில் உள்ள கூகுள் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த போன்கள் மூன்றிலும் நவீன AI தொழில்நுட்பங்களுடன், ஆண்ட்ராய்டு 14 (Android 14)-ல் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதிலும் 7 ஆண்டுகளுக்கு சாஃப்ட்வேர் மற்றும் செக்யூரிட்டி அப்டேட் அளிக்கப்படும் என்றும் கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த மெதபைல்களில் நவீன AI தொழில்நுட்பமான ஜெமினி (Gemini) மூலம், மேஜிக் எடிட்டர் (Magic Editor) அம்சம் அமைக்கப்பட்டுள்ளது. அதனை பயன்படுத்தி எடுக்கப்படும் புகைப்படங்களில் மிகவும் எளிமையாக இல்லாதவற்றை சேர்க்கவும், நீக்கவும் முடியும்.
இவை பிக்ஸல் 9-ல் 6.3 இன்ச், 1080x2424 Resolution கொண்ட ஓஎல்ஈடி (OLED) ஸ்கிரீன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கூகுளின் டென்சார் (Google Tensor) G4 செயல் திறன் கொண்ட சிப் பொருத்தப்பட்டுள்ளது.
அதேபோல், போனின் பின்புறம் இரண்டு கேமராக்களைக் கொண்டுள்ளது.இந்த கேமராக்கள் 0 மெகா பிக்ஸல் வைட் ஆங்கிள் லென்சும் (wide angle lens), 48 மெகா பிக்ஸல் அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்சும் இடம் பெற்றுள்ளது.
முக்கியமாக இது மால்வேர் எதிர்ப்பு (anti-malwar) மற்றும் ஃபிஷிங் எதிர்ப்பு (anti-phishing) பாதுகாப்புடன் இருப்பதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.மேலும், 4700mAh திறன் கொண்ட பேட்டரியும், 45W வேகமான சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சார்ங்கிஸ் வசதியும் அமைக்கப்பட்டுள்ளது.
12 ஜிபி ரேமில் வரும் இந்த பொன்களின் ஸ்டோரேஜ் 128GB மற்றும் 256GB என இரு ரகங்களில் கொண்டுவரப்பட்டுள்ளது. சந்தையில் தற்போது இதன் விலைப்படி பார்த்தால் 74 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பிக்ஸல் ப்ரோ ரக போன்களின் ஆரம்ப விலை ரூ.94 ஆயிரத்து 999 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், பிக்ஸல் ப்ரோ எக்ஸ் எல் ரக போன்கள் ஆரம்ப விலை ரூ. ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.