ஐபோனுக்கே டஃப் கொடுக்கும் அம்சத்துடன் கூகுள் பிக்சல் 8a... விலை எவ்வளவு தெரியுமா?
கூகுள் நிறுவனம் பிக்சல் 8a ஸ்மார்ட்போனை அசத்தலான ஆஃபருடன் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ள நிலையில், இதன் சிறப்பம்சங்கள் குறித்தும், விலை குறித்தும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
கூகுள் பிக்சல் 8a
கூகுள் நிறுவனம் அதன் லேட்டஸ்ட் பிக்சல் சீரிஸ் மாடலான கூகுள் பிக்சல் 8a ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
கூகுள் பிக்சல் 8a ஸ்மார்ட்போனின் முன்பதிவு தற்போது பிளிப்கார்ட்டில் தொடங்கியுள்ளதுடன், முன்பதிவு செய்பவர்களுக்கு பல்வேறு சலுகைகளும் அறிக்கப்பட்டுள்ளது.
குறித்த போனை முன்பதிவு செய்பவர்கள் பிக்சல் பட்ஸ் ஏ சீரிஸ் இயர்போன்களை ரூ.999க்கு வாங்கிக் கொள்ள முடியுமாம். இந்த விற்பனை வரும் மே 14ம் தேதி காலை 6.30 மணிக்கு பிளிப்கார்ட் தளத்தில் தொடங்க உள்ளது.
விலை எவ்வளவு?
இரண்டு வேரியண்டுகளாக உருவாகி வரும் இந்த ஸ்மார்ட்போனின், 128 ஜிபி வெர்ஷன் ரூ.52 ஆயிரத்து 999க்கும், 256 ஜிபி வேரியண்ட் ரூ.59 ஆயிரத்து 999-க்கும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
அறிமுக சலுகையாக எஸ்.பி.ஐ வங்கி கார்டுக்கு 4 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி மற்றும் பழைய போன்களை எக்ஸ்சேஞ செய்தால் ரூ.9 ஆயிரம் வரை பணம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆஃபர்களை பயன்படுத்து ரூ.52,999 மதிப்புள்ள கூகுள் பிக்சல் 8a ஸ்மார்ட்போனை ரூ.39,999க்கு பெற முடியும்.
சிறப்பம்சம் என்ன?
6.1 இன்ச் ஸ்கிரீன் மற்றும் OLED Actua டிஸ்பிளே மற்றும் 4492 mAh பேட்டரியையும் கொண்டுள்ளது.
கூகுளின் Tensor G3 சிப்செட் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் Aloe, Bay, Obsidian, மற்றும் Porcelain ஆகிய நான்கு நிறங்களில் கிடைக்குமாம்.
கேமராவை பொறுத்தவரை 64 மெகாபிக்சல் மெயின் லென்ஸும், 13 மெகாபிக்சல் அல்ட்ரா வைடு லென்ஸும், 13 மெகாபிக்சல் செல்பி கேமராவும் இதில் உள்ளது.
ஏஐ வசதியும் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்று உள்ளது. குறிப்பாக ஒரு போட்டோ எடுக்கும்போது, இடையில் தேவையில்லாத பொருட்கள் புகைப்படத்தில் காணப்பட்டால் அதனை நீக்கிவிட முடியும்.
இதே போன்று காணொளியில் தேவையில்லாத சத்தம் ஏதேனும் கேட்டால் அதையும் ஏஐ உதவியுடன் நீக்கிக்கொள்ளும் வசதியும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |