இந்தியாவில் வெளியாகப்போகும் கூகுள் பிக்சல் சிரீயஸ் - முதலில் வெளியாகும் மாடல் எது?
கூகுள் நிறுவனமானது தனது வாடிக்கையாளர்களுக்கு 6a ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் ஆனது, மே மாத வாக்கில் கூகுள் நிறுவனம் எப்போதும் பிக்சல் a சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்வதையே வழக்கமாக கொண்டிருக்கிறது.
இந்தியாவில் சோதனை செய்யப்படுவது பிக்சல் 6a மாடலாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்தியாவில் கூகுள் நிறுவனம் நேரடியாக வெளியிட்ட ஸ்மார்ட்போனாக பிக்சல் 4a இருக்கிறது.
கூகுள் தரத்தில் அசத்தலான வெளியான பிக்சல் 4a மாடல் இந்திய சந்தையில் அமோக வரவேற்பை பெற்று இருந்தது. முன்னணி வலைதளங்களில் பிக்சல் 4a விற்பனை துவங்கிய போதெல்லாம், அடிக்கடி விற்றுத் தீர்ந்து கொண்டே இருந்தது.
இந்தியாவில் பிக்சல் 6a மாடலை வெளியிடுவது பற்றி கூகுள் சார்பில் இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. எனினும், இந்த ஸ்மார்ட்போன் இந்த மாதமே அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
மேலும், கூகுள் நிறுவனத்தின் 2022 I/O நிகழ்வு மே 11 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்விலேயே புதிய பிக்சல் 6a சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம்.
மேலும் இதன் இந்திய வெளியீட்டு விவரங்களையும் இதே நிகழ்வில் எதிர்பார்க்க முடியும்.