Google Pixel 6... அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும் ஸ்மார்ட்போன்கள்.. இந்தியாவுக்கு கிடைப்பது எப்போது?

release lanuch Googlepixel6 Pixel6
By Rooban Oct 19, 2021 08:56 PM GMT
Report

இன்றைய நவீன சந்தையில் அன்றாடம் புது புது ஸ்மார்ட்போன்கள் வெளியாகி வருகிறது. ஆண்டுதோறும் புதிய ஸ்மார்ட் ஃபோன்களை உற்பத்தி அதிகரித்துகொண்டே வருகிறது.

இதனிடையே, அடுத்து வரும் சில நாட்களில் முன்னணி ஸ்மார்ட் ஃபோன் பிராண்டுகளான சாம்சங், கூகுள், மோட்டோரோலா மற்றும் ஆசஸ் போன்றவை தங்கள் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் மொபைல் ஃபோன்களை சர்வதேச அளவில் அறிமுகப்படுத்த இருக்கின்றன.

மேலும், சாம்சங், கூகுள் மற்றும் மோட்டோரோலா உள்ளிட்ட பிராண்டுகளின் புதிய ஸ்மார்ட் ஃபோன் வெளியீடுகளை வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் நிலையில், இந்த நிறுவனத்தின் டிவைஸ்கள் அனைத்தும் உடனடியாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்படாது.

சிறிது காலம் எடுக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் அறிமுகமாக இருக்கும் முன்னணி பிராண்டுகளின் ஸ்மார்ட் ஃபோன்கள் பற்றி தெரிந்துகொள்வோம்.

கூகுள் பிக்சல் 6 & பிக்சல் 6 ப்ரோ (google Pixel 6 & Pixel 6 Pro)

கூகுள் நிறுவனமானது பிக்சல் 6 மற்றும் பிக்சல் 6 ப்ரோ ஆகிய ஸ்மார்ட் ஃபோன்களை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஸ்மார்ட் ஃபோன்கள் கூகுளின் இன்-ஹவுஸ் டென்சர் SoC மற்றும் டெலிஃபோட்டோ ஜூம் லென்ஸ் (4x) உள்ளடக்கிய புதுப்பிக்கப்பட்ட கேமரா செட்டப்பை கொண்டிருக்கும் என தெரிகிறது.

அதே போல் கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, பிரான்ஸ், தைவான், ஜப்பான், அமெரிக்கா மற்றும் யுனைட்டட் கிங்டம் உள்ளிட்ட 8 நாடுகளில் பிக்சல் 6 சீரிஸை முதலில் அறிமுகப்படுத்த கூகுள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பதற்கான தகவல்கள் இதுவரை ஏதும் இல்லை.

மோட்டோரோலா எட்ஜ் எஸ் (Motorola Edge S)

மோட்டோ நிறுவனமானது விரைவில் லாஞ்ச்சாக உள்ள இந்த Motorola Edge S ஸ்மார்ட் ஃபோன் 12GB ரேம், 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட்டுடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேமராவை பொறுத்த வரை இந்த ஸ்மார்ட் ஃபோனில்108MP பிரைமரி கேமரா கொண்ட டிரிபிள் கேமரா அம்சம் இருக்கிறது.

மேலும், இவை 8 எம்பி டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 16 எம்பி கேமராவால் சூழப்பட்டுள்ளது. இதன் முன் பக்கத்தில் 25 எம்பி செல்ஃபி ஷூட்டர் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 5,000mAh பேட்டரி கெப்பாசிட்டி கொண்ட இந்த மொபைல் வரும் அக்டோபர் 20ம் தேதி அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ (Samsung Galaxy S21 FE)

நீண்ட நாளாக எதிர்பார்க்கப்பட்டு வரும் ஸ்மார்ட் ஃபோனான Samsung Galaxy S21 FE, ஃபாஸ்ட் சார்ஜிங், 6.4 இன்ச் AMOLED ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் மற்றும் 8GB ரேம் உள்ளிட்ட பல அம்சங்களுடன் வெகு விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து, சாம்சங் நிறுவனம் வரும் 20-ம் தேதி Galaxy Unpacked 2021 Part 2 என்ற நிகழ்வை ஏற்பாடு செய்துள்ள நிலையில், இதில் Galaxy S21 FE வெளியாகுமா என்ற எதிர்பார்ப்புகள் எழாமல் இல்லை. ஆனால், ஜனவரியில் தான் இந்த ஸ்மார்ட் ஃபோன் அறிமுகமாகும் என்ற உறுதிபடுத்தப்படாத தகவல்களும் உலா வருகின்றன.

ஆசஸ் 8Z (Asus 8Z)

Asus Zenfone 8 லாஞ்ச் செய்யப்பட்டு சுமார் 5 மாதங்களாகியும் இந்தியாவில் இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை. வெகு விரைவில் இந்த ஸ்மார்ட் போன் Asus 8Z என்ற பெயரில் நாட்டில் அறிமுகமாகும் என தெரிகிறது.

எனினும் அதிகாரப்பூர்வ தேதி எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. Asus 8Z ஸ்மார்ட் ஃபோன் 16GB ரேம், 256GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட்டுடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
மரண அறிவித்தல்

நவாலி, சுண்டுக்குழி

24 Apr, 2026
மரண அறிவித்தல்

வேலணை, வவுனியா

24 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, நெதர்லாந்து, Netherlands

26 Apr, 2015
நன்றி நவிலல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, Toronto, Canada

27 Mar, 2026
மரண அறிவித்தல்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

26 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் மேற்கு, Jaffna, கோண்டாவில் மேற்கு

24 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, திருச்சி, India

25 Apr, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US